புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு நூறாண்டு காதல் 100 காதல் கவிதைகள் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு நூறாண்டு காதல் 100 காதல் கவிதைகள்
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

கவிஞரின் வாழ்வில் காதலா? 034

08 பிப்ரவரி 2023 784 பார்வைகள்
கவிஞரின் வாழ்வில் காதலா? 034

கவிஞரின் வாழ்வில் காதலா..?  

   முதல் அழுகையின் போது 
            அம்மாவின் காதல் ..! 
   தவழ்ந்து வருகையில் 
            தந்தையின் காதல் ..! 

   சிறு சண்டைகளின் மீது
            சகோதரனின் காதல்..!
    அன்புத்  தருகையில் 
           அக்காவின் காதல் ..! 
      
  பள்ளியறை சொல்லித் தந்த 
         கல்வியின் காதல்..! 
   தானாய் வந்த தமிழ்க்
         கவிதையின் காதல் ..! 
  
   ஊரும் உறவும் ஒதுக்க 
           தனிமையின் காதல்..! 
   பேறும் புகழும் பெற்ற
          வெற்றியின் காதல் ..!

   கோட்டைகளைத் தகர்க்கும் 
       கோபத்தின் காதல்..!  
   ஏட்டுகள் எழுதிட எனக்கோ
       கவித் தாகத்தின் காதல்..! 

   உடைந்த வீரனுக்கு உயிரிட்ட
          தங்கையின் காதல்..! 
   தடையைத் தகர்த்து தடமிட்ட
       தன்னம்பிக்கையின் காதல்..! 

   ஆதரவு அளிக்கும் அன்பு 
         உள்ளங்களின் காதல்..! 
    என்னை அழிக்க எண்ணும் 
       எண்ணங்களின் மீதும் 
               எனக்கும் காதல்..! 
    
 இதுவரை காதல்  இதிலுண்டு..!            
      இப்போது காதல் எதிலுண்டு..? 
 
   சாதனை செய்ய சபதமிட்ட 
          சட்டத்தின் மீது காதல்..!  
   கணக்கிட்டு சொல் என்றால் ? 
       விண்மீனின் விளைச்சலே 
            என்மீது கொண்ட காதல் ..! 
   
     எத்தனை காதலப்பா ? 
           இத்தனை சிறிய மனதிற்குள்..! 
          இன்னும் காதல் ..! 
          இளமையின் காதல் ..!     
   

 - கவிஞர் கு அழகர்சாமி; 
இளங்கலை சட்டம் இரண்டாம் ஆண்டு; 
       அரசு சட்டக் கல்லூரி;
       கோயம்புத்தூர் மாவட்டம் - 641046.
  

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE