புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , பெண்கள், பெண்கள், கவிதைகள்

இல்வாழ்கை

21 ஜனவரி 2023 582 பார்வைகள்
இல்வாழ்கை

அதிகாரம் - 5

*இல்வாழ்க்கை*

நல்வாழ்க்கை 
நல்லோருக்கு
உறுதுணை 
ஆகுமே ! 

வேந்தர்
துறவி
சுற்றத்தாருக்கு 
நன்றாகுமே ! 

ஈதலால்
இல்லாமை 
இனிதே
இதமாகும் ..

இரங்குதலால் 
இறப்பும்
இதயத்தில்
பதமாகும் ..

சுற்றம்
தெய்வம்
தென்புலம்
சிறப்பாகும் ..

நாடிவரும்
விருந்தை
சிறப்பிப்பது
பேறாகும் ..

நல்வழிப்
பொருளே
இல்லத்திற்கு
நலதாகும் ..

நல்வாழ்க்கையில் 
இப்பொருளே 
பகிர்தலுக்கு 
வளமாகும் ..

அன்பும்
அறனும்
பண்பிற்குப்
பயனாகும் ..

நல்வழி
சென்றிட
அன்பே 
அறனாகும் ..

இல்லறமே
நல்லறமாக 
நல்மார்க்கம்
நன்றாகும் ..

அறமாகா
மார்க்கத்தை
நாடினால்
தீதாகும் ..

இயல்பினான் 
இனிதே
இயல்புடன்
வாழ்வான்.

இல்வாழ்க்கை
நலத்தினில்
மேம்பட்டு
முதலாவான்.

நல்வழியில்
வாழ்தல்
துறவினில் 
மேலாகும் ..

நல்வழியில்
வழியாக்குதல்
தவத்திலும்
புகழாகும் ..

குடும்ப
வாழ்க்கையே
அறத்திற்குச்
சார்பாகும் ..

பழியின்றி
வாழ்ந்திடல்
இல்லறத்திற்கு 
ஏராகும் ..

நல்வினை 
செய்தால்
வாழ்வாங்கு
வாழலாம் ...

வானுறை 
தெய்வத்துள்
மதிப்புடனே 
வாழலாம் ...

*முனைவர் இராமகுமார்*
உதவிப் பேராசிரியர்,
விவேகானந்தா கல்லூரி,
அகதீச்சுவரம்,
கன்னியாகுமரி மாவட்டம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE