மகிழ்ச்சி FM ல் ஹரியின் கவிதைகள்
நண்பர்கள் தினம்:
ந கமும் சதையுமாய்
நரை திரையிலும்
நா ளெல்லாம் உன் வாசம்
நி னைவுகளின் நிழலாய்
நீ என்ற சொல்லுக்கு
நீங்கா இலக்கணமாய்
நு ண்ணிய அன்பை பொழியும் ஊற்றாய்
நூ றாண்டுகள் போற்றும் ஆலமரமாய்
நெ ஞ்சம் நிறைந்த பாசத்துணையாய்
நே சத்தின் மொழியாய்
நை யாண்டி இல்லா நம்பிக்கை கரமாய்
நொ டிப்பொழுதில் தோள் கொடுக்கும் தோழனாய்
நோ க்கத்தின் கலங்கரை விளக்கமாய்- திகழும்
இனிய நண்பர்களுக்கு ...
நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!
************************************************************************************************
முதல் பார்வை:
முதல் முறை
உனை பார்த்த நொடி
மரக்கிளையில்
மழைத்துளி விழுந்த சப்தம்
மௌனத்தின் ராகமாய்
இத்தனை நாள்
எங்கே மறைந்திருந்தாய்?
காத்திருந்த காலங்களில்
காற்றோடு போன சருகுகளாய்
என் நினைவுகள் சிதறின..
நீ வந்த பிறகு
வானத்துக்கும் ஒரு நிறம்,
காற்றிக்குள் ஒரு வாசம்,
என் நாளும்
கனவுகளின் நகர்வில்...
உன் கண் பேசும் பாஷைகள்
என் இதயத்தின் கண்ணாடியாய்
ரசித்துக் கொண்டிருக்கிறது.
உன் அருகில் நடக்கும்
ஒவ்வொரு அடியும்
வசந்தகால பூக்களாய்
கை கோர்க்காமல் இருந்தாலும்
நிழல்களின் நினைவுகளின் நான்...
நாளை என்ற ஒன்று நிலையில்லை;
ஆனால்
உனை நினைக்கும் ஒவ்வொரு நொடியும்
வாழ்க்கை சக்கரம் சுழல்கிறது
எதிர்காலத்தை நோக்கி...
************************************************
வெற்றிடம்:
உடைந்த பானையில்
காற்றுக்கென சாளரமாம்
— வெற்றிடம்
காத்திருந்த விழிகளுக்கு
கானல்நீரானது காட்சிகள்
-- வெற்றிடம்
****************************************
வெற்றி:
விழி மூடிய கனவுகளின்
விதை தூவிய செயல்களின்
விருச்சம் - "வெற்றி"
********************************************
ஓவியம் :
வெள்ளை கம்பளத்தில்
தூரிகையின் அபிநயம்
கற்பனை வானில்
கலைஞனின் வர்ணஜாலம்
வானவில்லாய்
- ஓவியம்
*************************************************************************
தமிழ் புத்தாண்டு 2026 :
சித்திரை சிற்பமாய் பௌர்ணமி நிலவும்
வைகாசி வைகறையில் விருச்சமாய் விசாகமும்
ஆனி ஆனமான ஆதியோகியின் திருமஞ்சனமும்
ஆடி ஆர்ப்பரித்து ஆலயங்களில் பூத்து குலுங்கும் பூரமும்
ஆவணி ஆலிலை தவழ்ந்து தடங்கல் நீக்கும் கோகுலமாய்
புரட்டாசி புல்லாங்குழலாய் புவியெங்கும் பாசுரங்களாய்
ஐப்பசி ஐஸ்வர்யங்கள் ஐக்கியமாகும் அக்ஷய பாத்திரமாய்
கார்த்திகை கார்மேக குளிரில் குடுவையில் ஒளிரும் விளக்காய்
மார்கழி மாலைகள் தொடுக்கும் மாவிலை தோரணமாய்
தை தழைத்தோங்கும் கதிர் போல் சக்கரை பொங்கலாய்
மாசி மாக்களின் மாசுபோக்கும் மங்கள மகமாய்
பங்குனி பழமுதிர் சோலையாய் தரணியில் தேர் உத்திரமாய்
பன்னிரண்டு திங்களும் பிரகாசமாய் பரிசளிக்கட்டும்
****************************************************************
ஒற்றுமை:
மணல் கயிறாய்
மகுடிக்கு மயங்காமல்
மண்ணோடு வேராய்
மிடுக்காய் இருப்பதுமேல்
***********************************************************************
தேர்தல் 2026:
ஐந்தாண்டு கால சுழற்சி
தேர்தலெனும் தேர்பூட்டி
வாக்குகளெனும் சிலையை அலங்கரித்து
மனித சங்கிலியென வடம் பிடித்து
முட்டுக்கட்டையெனும் முயலாமைகளை
நினைவூட்டி
ஒற்றை விரல் மையினில்
மையத்தின் மகுடத்தை தீர்மானிப்பீர்!
மறவாமல் வாக்களிப்பீர்
*****************************************************
மாற்றம்:
மை கறையினால்
வை கறையில் மாற்றம்
மாக்களின் மனஓட்டத்தால்
மக்களாட்சியின் மாற்றம்
மாசற்ற ஆட்சியாய்
வெற்றிகள் வீழ்ச்சியாகாமல் காத்திட
நல்லாட்சி அமையட்டும்
உரக்க சொல்வோம்
மாற்றம் ஒன்றே மாறாதது!!
*********************************************************
அன்னையர் தினம் 2026 :
அ னைத்தும் அடங்கும்- உன்
அ ன்பில்
ஆ ருயிரும் ஆனந்தமாய்
ஆ ழ்கடலிலும்
இ ன்னல்கள் இடறினாலும்
இ ன்முறுவல் இடராமல்
ஈ கையின் ஈர்ப்பாய்
ஈ ரமாய் ஈசனாள்
உ வமைக்கு உரித்தான
உ ன்னத உயிராய்
ஊ க்கமின் ஊற்றாய்
ஊ றிய ஊர்தியாய்
எ ளிமையின் எடுத்துக்காட்டாய்
எ திரிக்கு எரிமலையாய்
ஏ ழ்கடலில் ஏர்பூட்டி
ஏ கோபித்து ஏகனாய்
ஐ இன் ஐயக்கியத்தில்
ஐ ஸ்வர்யமாய் ஐம்பொறி வாக்காய்
ஒ ற்றுமை ஒ லியாய்
ஓ விய ஒ ளியாய்
ஒளிவிளக்காம் மாதரே
உமை வணங்குகிறோம்
*************************************************************
முரண்:
முளரியின் முத்தத்தில்
முகை முகிழ்ந்தது
புரளியின் படிமனில்
**************************************************************
நினைவுகள்:
கல் எறிபட்ட குளமாய்
கலங்கிய நெஞ்சத்தின் அதிர்வலை
கரை சேரா நினைவுகளோடு
கண்ணிற்கும் காற்றிக்குமான தொடர்பலை
*************************************************************
அலை:
நகையாடிய பொழுதுகளில்
நிழலாடிய நினைவுகளின்
தழுவல்கள்...
***********************************************************
சினிமா கவிதை:
அபூர்வ ராகங்கள் (மாய்) என் நெஞ்சிற்குள்
உன் சலங்கை ஒலி
உளியின் ஓசை யில் செதுக்கப்பட்ட
உன் நினைவுகள் என் ஆட்டோகிராப்
பூவெல்லாம் உன்வாசம் உணர்ந்தேன்
ரோஜா வில்
மனசெல்லாம் நீதான் என்
நெஞ்சிருக்கும் வரை
உன் மீது காதல் கொண்டேன் - அப்போது
எனக்கு 20 உனக்கு 18
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உன்னுடைய
ஜில்லென்று ஒரு காதல் (லை) உன் விழிகளில்
காதல் தேசம் புறப்பட்டேன்
கிழக்கே போகும் ரயில் (லில்)
அன்பே வா அருகிலே நான்
காதலில் விழுந்தேன் வந்து
நீ என்ன காக்க காக்க
சக்கரக்கட்டி (யே) என் செல்லமே
உனை பிரியாத வரம் வேண்டும் எனக்கு
உன் பார்வை ஒன்றே போதுமே நான்
வெற்றிக்கொடி நாட்ட
நேருக்கு நேர் பார்க்க முடியாவிட்டாலும்
என் கண்கள் எப்போதும் உன் நினைவின் நிழல்கள் (ளில்)
ஊமை விழிகள் (ளாய்) இருந்தாலும் உன்
மௌனம் பேசியதே என்னிடம்
நான் கற்றது த…
*****************************************************************
ஏக்கம்:
இலைமறை காயாய்
கருமேகங்கள் சூழ
மெல்லிய காற்றில்
மண்மணம் வீச
ஒளிக்கீற்றாய் மின்னல் ஒளிர
மத்தளமாய் இடிமுழங்க
வசந்தமாய்
வானம் கொட்டட்டும்
முதல் மழைத்துளி -என் தேகம்
உணர கணம் நோக்கி...
***********************************