புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
கதைகள், கதைகள், கவிதைகள்

காந்தி மகான்

01 அக்டோபர் 2022 740 பார்வைகள்
காந்தி மகான்

காந்தி மகான்

அன்பின் மறுவுருவே
அகிம்சைத்
திருவுருவே

அண்ணல் காந்தியே
அன்னையானவரே
தந்தையானவரே

எங்கள் தேசப்பிதாவே
தேசந்தனை
மீட்க

தேவைகளைத்
துறந்தவரே
தீண்டாமை ஒழித்தவரே

சட்டம்பயின்ற
சமாதானமே
சகலத்
துன்பங்களையும் சகிப்புத்தன்மையால் கடந்தவரே
அன்பால்

உள்ளங்களை
உலகை
உணர்வுகளை மதித்த தேசப்பிதாவே

வார்த்தைக்கும் 
செய்ல்களுக்கும்
வலிமையுண்டு
என்று நிரூபித்தவரே

எங்களின் தந்தையே
தன்னலம் கருதாமல்

நம்முடைய நாட்டை மீட்க
நானிலம் முழுவதுக்கும்

நாசகார
சக்திகளை எதிர்த்து
சிறைசென்றவரேதன்னை பூட்சுக்காலால. மிதித்த
சிறை அதிகாரிக்கு தனது கையால் செருப்பு செய்துகொடுத்தவரே

அன்பது அகிலம் ஆளும் என்பது உணர்ந்து அனைவரையும்
உணர வைத்தவரே
உன்னதமானவரே
எங்களின்
மகாத்மாவே
தேசப்பிதாவே

அன்னியரிடமிருந்து அன்னைத்தாய நாட்டை மீட்டு நள்ளிரவில் நற்தேனினும் இனிய சுதந்திரத்தைப் பெற்றுத்தந்தவரே

பெறற்கரிய
சுதந்திரத்தைப்
பெற்றே
தனது இன்னுயிரையும்
தேசத்துக்கே கொடுத்தவரே
எங்களின் காந்தியே
தரணி போற்றிடும் தகைமை கொண்டவரே

முனைவர் கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE