புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தங்கேஸ் கவிதைகள் , தங்கேஸ் கவிதைகள் , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

சத்திய சோதனையை தாண்டியவர்

02 அக்டோபர் 2022 1,128 பார்வைகள்
சத்திய சோதனையை தாண்டியவர்

சத்தியசோதனையை தாண்டியவர்...

அகிம்சையின் அம்சமாய் பிறப்பெடுத்தவர்
அரிசந்திரனின் வாய்மையை போற்றி
ஆயுள் முழுவதும் பற்றியவர் ..

ஐயம் அகற்றி அறிவை வளர்த்து
ஒற்றுமை உணர்வை
ஓங்கிட செய்தவர்... 
பொறுமையையும் அகிம்சையையும்
துணையாய் கொண்டு
சத்தியசோதனையை தாண்டியவர்...
அன்பெனும் ஆயுதத்தால்
ஆங்கிலேயனின் ஆணவத்தை
வேரறுத்தவர்...

மன ஒழுக்கம் பேணியவர்
தினம் தூரதூரம் நடந்தவர்
உப்பு காய்ச்சிய உத்தமர்
உலகத்தின் அரும்பெரும் தலைவர்
தப்பென ஆயுதங்களைத் தடுத்தவர்
தரணிக்கு சத்தியத்தை உரைத்தவர்.. 
உலகிற்கே பெரும் தனமென ஆனவர்..

மனிதருள் மாணிக்கம்
அகிம்சையினால் அனைவரின் மனதையும்
கொள்ளைக் கொண்டவர்...
காந்தியம் வழி நம்மை வழிநடத்தும்
அண்ணல் வழி நடப்போம்
அன்பின் மொழி படிப்போம்
அகத்தின் விழி திறப்போம்..

கோ. ஶ்ரீஅஹிலேஷ்
கும்பகோணம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE