மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
கார்த்திகை தீபம்...:
கார்த்திகை தீபம்
மாதத்தின் பெருமையே//
இரவானால் எரிந்திடுமே
சோதியது அழகாய்//
அகல்விளக்கு அலங்காரம்
வீடுதோறும் சிறப்பாகும்//
இறையவன் ஒளியாய்
இருக்கிறான்;உரைத்திடுமே//
திருவண்ணாமலை அழகாகும்
சிவனுக்கே மிகையலங்காரம்//
நடப்பவை நலமாக
நம்பிக்கை தந்திடும்//
மழையானாலும் தூறலிலும்
அணையா விளக்காகும்//
மலையினது உச்சியிலே
ஒளிர்தல் பெருநெருப்பாய்///
இருளது அகற்றியே
வெளிச்சமது நிறைத்திடும்//
அகமது நிரப்பமாகும்
விருப்பங்கள் சுகமாகும்//
- சா.சையத் முகமது
கிருட்டிணகிரி