புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

என் தூவல் துணைவன் பாரதி... ! 074

07 டிசம்பர் 2022 878 பார்வைகள்
என் தூவல் துணைவன் பாரதி... ! 074

என் தூவல் துணைவன் பாரதி 

புரட்சி படைத்திடும் கவி வடித்திட 
     துணையாகும் சுதந்திரத் தூவல்!
மாட்சி தந்திடும் சுந்திரத் தமிழில்
     கற்பனைத் தூரிகைத் தோய்த்தெழுதிடச் செய்திடுவான்!

வேணுகானமாய் இனித்திடும் புதுக்கவிதைக்கு 
    வேய்குழலோனாய் வந்திடுவான்!
வேண்டியதற்கு வேள்வி செய்திட
    மரபுத் துணையாவான்!

ஊரார்க்கு உதவிட உற்றவரோடு மகிழ்ந்திட
     அணி திரட்டிடும்படி அணியிலக்கணமாவான்!
கள்ளூறும் எண்ணம் மேலோங்க 
    கண்ணம்மாவின் காதலனாவான்! 

விடுதலைக்கும் புதுமைக்கு வித்திடவும்
    புதுமைப் புலவனாகிடுவான்!
வானளாவியக் கனவும் மெய்ப்பட வேண்டினால்
      மகாகவியே துணைக்கழைக்க காவியமாய் ஒளிர்ந்திடுவான்! 

- ச.லெட்சுமி லிங்கம்       
திருநெல்வேலி.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE