அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
புத்தகம் தருமே புதிய உலகம்
புத்தகம் தருமே
புதிய உலகம்...
புத்தியைத் தீட்டிப்
புகழதைக் கொடுக்கும்
புத்தகம் என்ற
பொக்கிசம் தானே
அறிவும் ஆற்றலும்
அளுமையும் அளிக்கும்
நெறிகளை உரைக்கும்
நெகிழ்ச்சியும் கொடுக்குமே
அயராத முயற்சியும்
ஆக்கத்தை ஊட்டும்
உயர்ந்திட நாளும்
உயர்ச்சியும் புகட்டுமே
அறியாமை இருளை
அகற்றி எரியும்
தெரியாத விடயத்தையும்
புரிந்திட வைத்திடுமே
இல்லாமை இருந்தாலும்
இடர்கள் வந்தாலும்
கல்வியும் எப்போதும்
காலத்திற்கும் தொடருமே
அழியாத செல்வமாய்
அருளும் கொடையே
வழிகளும் சொல்லும்
வசந்தமாய் வாழவே
-கிருஷ் அபி இலங்கை.