புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகள், கவிதைகள்

பார் போற்றும் பாரதி...002

20 நவம்பர் 2022 1,108 பார்வைகள்
பார் போற்றும் பாரதி...002

பார் போற்றும் பாரதி


கவிதை/கட்டுரை/பாட்டுக்கள் உரைத்த
வித்தகனான எட்டாவது அதிசயம்!
வெற்றுக் கவிஞனாக இல்லாமல்
தமிழ் பற்றுக் கவிஞனானவன்!

பெயரை உச்சரிக்கையில் சிலிர்த்த
உள்ளம் தரும் புரட்சிப் பாவலன்!
புதுநெறி நிறைந்த பாட்டுத் தேரேறி
பாரெல்லாம் பயணித்த சாரதி!

அச்சமென்பது அணுவளவும் இல்லாத,
கவிதையெனில் நினைவாகும் மறவன்!
வாழ்ந்த காலம் கொஞ்சமாயினும்
படைத்ததில் தரணி மிஞ்சுபவன்!

சுதந்திர வேட்கை கவிதைகள் வடித்து,
விடுதலை நம்பிக்கை நாற்று நட்டவன்!
இதய திடம்/ வேட்கை மனம் கொண்டு,
வெள்ளையன் ஆதிக்கம் எதிர்த்தவன்!

நிலத்தில் யார்க்கும் அஞ்சாது
தமிழ்மொழிக்கு தனித்துவம் ஈந்தவன்!
பாமாலை/புகழ்மாலை சாற்றியே
தமிழன்னை மகிழ்வுறக் களித்தவன்!

பாரதி போல் இயற்கையை ரசித்து
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென
பிரதிபலிக்க விரும்பும் மனிதனுள்ளே
காணலாம் பார் போற்றும் பாரதியை!

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
குணசேகரன்,
வாலாஜாப்பேட்டை...632513

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE