மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
பகுத்தறிவு போதித்த செங்கதிரோன் நீ,.. 059
பகுத்தறிவு போதித்த செங்கதிரோன் நீ,
செங்கதிராலான எங்கள் செந்தமிழே பாரதி.
உன் தமிழ் உணர்ச்சி பெருக்கால் பெண்ணிற்கும் மீசை துடிக்கும்.
சினம் கொண்ட பாரதியின் சீற்றம் கொண்ட தமிழ் ஆங்கிலேயர்களை ஆட்டிப்படைக்கும்
பெண் அடிமை போதிக்கும் பேதைகளைச் சாட்டையடி அடிக்கும்.
இயற்கையின் காதலன் நீ,
இயற் தமிழின் இலக்கணம் நீ.
-முனைவர். எட். பிரியதர்ஷினி,
உதவி பேராசிரியை, வணிகவியல் துறை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), திருநெல்வேலி-627011