செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

ரௌத்திரம் பழகு..! 029

27 நவம்பர் 2022 1,641 பார்வைகள்
ரௌத்திரம் பழகு..! 029

அன்பில், அறிவில் ரௌத்திரம்  பழகு

 ஆளுமையில், ஆர்வத்தில் ரௌத்திரம்  பழகு

இரக்கத்தில், இனிமையில் ரௌத்திரம்  பழகு

 ஈகையில், ஈரத்தில் ரௌத்திரம்  பழகு

 உண்மையில், உழைப்பில் ரௌத்திரம்  பழகு

ஊக்கத்தில், ஊழியில் ரௌத்திரம் பழகு

 எண்ணங்களில், எழுச்சியில் ரௌத்திரம்  பழகு

ஏர்ப்பில், ஏளிதத்தில் ரௌத்திரம் பழகு

ஐம்பொறியில்,  ஐயத்தில் ரௌத்திரம்  பழகு

 ஒற்றுமையில், ஒறுமையில் ரௌத்திரம்  பழகு

 ஓங்காரத்தில், ஓரளவையில்ரௌத்திரம்  பழகு

ஔகாரத்தில், ஔடதத்தில் ரௌத்திரம்  பழகு

பாரதி - பண்பில், பரிவில் ரௌத்திரம் பழகு

பாரதி - பாட்டில், பார்வையில் ரௌத்திரம்  பழகு

பாரதி - பிணைப்பில்,  பிம்பத்தில் ரௌத்திரம்  பழகு

பாரதி - பீடத்தில், பீழையில் ரௌத்திரம்  பழகு

பாரதி -  புரிதலில், புன்னகையில் ரௌத்திரம்  பழகு

பாரதி - பூவையில்,  பூர்வத்தில்  ரௌத்திரம் பழகு

பாரதி - பெண்மையில், பெருமையில் ரௌத்திரம்  பழகு

பாரதி - பேச்சில், பேரறிவில் ரௌத்திரம்  பழகு

பாரதி - பைந்தமிழில், பைதிரத்தில் ரௌத்திரம்  பழகு

பாரதி - பொறுப்பில், பொறுமையில் ரௌத்திரம்  பழகு

பாரதி - போதையில், போதனையில் ரௌத்திரம்  பழகு

பாரதி - பௌத்தரில்,  பௌதிகத்தில் ரௌத்திரம்  பழகு


மொத்தத்தில் பாரதியின்
 உணர்வில், உரிமையில் ரௌத்திரம்  பழகு

 வண்ணங்களில், வழக்குகளில் ரௌத்திரம் பழகு

சிந்தனையில்,  சிரிப்பில் ரௌத்திரம்  பழகு

 வியப்பில், வியர்வையில் ரௌத்திரம்  பழகு

 நேர்மையில், நேர்த்தியில் ரௌத்திரம்  பழகு

 நுண்மையில், நுண்ணறிவில் ரௌத்திரம்  பழகு

காற்றில், காவிரத்தில் ரௌத்திரம்  பழகு

  தாகத்தில், தாக்கத்தில் ரௌத்திரம் பழகு

 நினைவுகளில், நிழலில் ரௌத்திரம்  பழகு
 
எக்கணத்திலும்
ரௌத்திரத்தின்  தன்மை மாறாமல்
 ரௌத்திரம் பழகு.

இவண், 
கவிஞர். பி. பத்ரிநாராயணன்.
இராஜபாளையம்.
 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE