வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

முத்தமிழின் மைந்தன் பாரதி...!

11 செப்டம்பர் 2022 602 பார்வைகள்
முத்தமிழின் மைந்தன் பாரதி...!

முத்தமிழின் மைந்தன்

எட்டய புரத்து எழுச்சி நாயகன்
பட்டமாய்ப் பறந்த
பாரதத்தின் பாரதீ

அன்னைத் தமிழை 
அமுதாய் பருகிய மைந்தன்
பொன்னாய் பூக்கவைத்து
பெண்ணடிமை போக்கியவரே

ஆங்கிலேயருக்கு அதிர்ச்சியளித்த
ஆளுமைமிக்க முண்டாசுக்கவிஞனே
மங்காத புகழோடு
மடமை கொளுத்தியவரே

சாதிமத பேதங்கள்
கலைந்த சத்தியவான்
கதியே தமிழென
கண்ணாய் வாழ்ந்தவரே

தரணியில் தளிர்க்கும் செடியாய் உன்புகழ்
வீரத்தின் வித்தே
விளைந்த மண்ணின் சொத்தே

குவளயத்தில் சிகரமாய்
குன்றாது உன் உயர்ச்சி
பவளமாய் மின்னும்
பாட்டன் பைந்தமிழ்ப் புலவரே
உன்நாமம் உயிர்த் தமிழோடு ஒன்றியதே

கிருஷ் அபி, மன்னார்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE