வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, நிகழ்ச்சிகள், சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, நிகழ்ச்சிகள், கவிதைகள்

கவியொன்று தருவாயா பாரதி...! 013

20 நவம்பர் 2022 628 பார்வைகள்
கவியொன்று தருவாயா பாரதி...! 013

கவியொன்று தருவாயா பாரதி?

யாமறிந்த மொழிகளிலே 
தமிழ்மொழி போல் இனிதெங்குமில்லை என்றாய்! 
தீந்தமிழை சுவைத்து 
தேன் சொட்டும் 
மொழியாம் தேன்தமிழை
உயிர்மூச்சாய் கொண்டாய்!
தீண்டாமை ஒழித்து அனைவரும்
சமமென்று உணர வைத்தாய்!
அச்சம் தவிர்க்க உன் பாடல்களில்
தன்னம்பிக்கை தந்தாய்!
மனதில் உறுதி வேண்டுமென்றே 
எழுச்சி தந்தாய்!
செந்தமிழ் நாட்டின் பெருமைகளை
உன் வரிகளிலே உணர வைத்தாய்!
ஓடி விளையாடு பாப்பா என்றே
நல்வழி நெறிமுறைகளை காட்டினாய்!
கவிகளிலே ஆயிரம் அழகியல்
வார்த்தைக்கொண்டே 
பெண்ணடிமைக்கு குரல் கொடுத்தாய்!
தாயின் தாலாட்டு பாடலுக்கிணங்க சின்னஞ்சிறு கிளியாய் 
கண்ணம்மாவை பாவித்து நீ பாடிய பாடலில் பெண்பிள்ளைக்கு முன்னுரிமை தந்து தாயுமானவனும் ஆனாய்!
அந்த பாடலின் வரிகள் இசைக்கும் பொழுதெல்லாம் ஏங்குகிறது மனது!
இன்று பாரதி நீ இம்மண்ணுலகில் இருந்திருக்கலாம்!
ஆம் இருந்திருக்கலாம்!
உன்னிடம் இறைஞ்சி கேட்டிருப்பார்கள் கவியொன்று வடித்து தரவே!
சில கயவர்கள்  பெண்களை
குழந்தை முதல் வயோதிகர் வரை பாராமல்
வண்புணர்வு செய்வதை
நெற்றியில் அடித்தாற்போல் 
கவியொன்று தருவாயா பாரதி?
அதை கட்டாயப்பாடமாக்கிடலாம் பள்ளிகளில் என்றே
கொதிக்கிறது மனது!
      
- காயத்ரி ராஜ்குமார்,
மதுரை.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE