புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
காதல் கவிதை , காதல் கவிதை , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அண்ணா என்னும் அறிவொளி..! 014.

10 செப்டம்பர் 2022 1,091 பார்வைகள்
அண்ணா என்னும் அறிவொளி..! 014.

அண்ணாவெனும் அறிவொளி... 

வீறுக்கொண்ட பேச்சால்
தமிழன் நெஞ்சினில் 
ஏறு கொண்டு உழுதவர்...
தமிழக வரலாற்றில்
தனக்கென தனியிடம் வகுத்தவர்...
ஜாதிமத பேதங்களையும்
மூடநம்பிக்கைகளையும்
வேரோடு களைந்தவர்...

பகுத்தறிவு பகலவனின் 
மனதிற்கு பிடித்திட்ட
கருத்து செறிவாளன்
பலகோடி உயிர்களின் அபிமானன்...
அப்பாவியாய் தோற்றமளித்த அறிஞன்
குரலால் எழுத்தால் 
தமிழ்நாட்டை ஆண்ட மன்னவன்... 

தாய்நாட்டிற்கு தமிழ்நாடென
பெயர்சூட்டி
தமிழர்களை தலைநிமிரச் செய்தவர்.. 
சுடரொளி மங்கா அறிவின் ஆலயம்
எளிமையின் மறு உருவம்
மக்கள் மனதின் கதாநாயகன்
ஏனென்றால் என்ற வார்த்தையில் விளையாடி
ஆங்கிலேயனையும் ஆச்சரியபட வைத்தவர்
தன்னிகரில்லா தலைவன்
தமிழ்நாட்டின் விடிவெள்ளி
அண்ணாவெனும் அறிவொளி... 

கோ.ஶ்ரீ ஆதேஷ்
கும்பகோணம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE