புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

தன்னைத் தானே செதுக்கிய சிற்பி அம்பேத்கர் 066

09 ஏப்ரல் 2023 830 பார்வைகள்
தன்னைத் தானே செதுக்கிய சிற்பி அம்பேத்கர் 066

தன்னைத்தானே செதுக்கியச் சிற்பி மாமேதை அம்பேத்கர்.

கல்வியெனும் உளியால் தன்னை செதுக்கியவரன்றோ!!
மும்பை எல்பின்ஸ்டன் கல்லூரியில் முதல்பட்டம்!      
பி.ஏ. பொருளாதாரம் பெற்றாரே!! அமெரிக்கா
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பொருளாதாரம்!! 
"இந்தியாவின் ஆதாயப்பங்கு ஒருவரலாற்று ஆய்வுக் 
கண்ணோட்டம்" ஆய்விற்காக அமெரிக்காவில் டாக்டர்பட்டம்!!  
'ரூபாயின் சிக்கல்களும் அதன் தீர்வுகளும்' 
ஆய்வுக் கட்டுரைக்காக "டாக்டர் ஆப் 
ஆல்சைன்ஸ்" இலண்டன் பல்கலைக்கழகப் பட்டம்!!    
இலண்டன் சட்டக் கல்லூரியில் "பாரிஸ்டர்பட்டம்"!      
அமெரிக்க கொலம்பியா பல்கலைக் கழகம்
கௌரவ டாக்டர் பட்டம்!  என்றே  
வாங்கிய பட்டங்கள் அம்பேத்கரால் புகழ்பெற்றனவே!!      
கல்வியின் பயனே பிறருக்கு உதவுதலென்றே! 
புத்தக இல்லம் 'ராஜ்கிரகம்' மும்பையிலே!!    
ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 
பயிலவே பகிஷ்கிரித் ஹித்தகாரணி சபை!!      
'மக்கள் கல்விக்கழகம்' அனைவருக்கும் கல்வி
அளித்ததே!!  பெண் கல்வியை வலியுறுத்தினாரே!!
'சித்தார்த்தா' மும்பையில் கல்லூரி!! வசதியற்றோர் 
பிற்படுத்தப்பட்டோர் படிக்க விடுதிகள் பல 
மும்பையிலும் அவுரங்கா பாத்திலும் துவங்கினாரே!!    
சிறந்த அரசியல் தலைவர்கள் உருவாகவே! 
நாக்பூரில் கல்வி நிலையம் உருவாக்கினாரே!!     
அதிக ஆய்விற்கான பட்டங்கள் பெற்றே 
தலைச்சிறந்த கல்வியாளராக மட்டும் அல்லாது!
சிறந்த இந்தியாவை வடிவமைத்தவர் அன்றோ!!
மேத்தகு டாக்டர் அம்பேத்கர் அவர்கள்!!    
அம்பேத்கரைப் போற்றியே அவர் அடிபணிந்து
அவர்வழியில் கல்வித் தொண்டு புரிவோமே!!

- முனைவர் வே.விஜி, சென்னை.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE