செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, பெண்கள், பெண்கள், கவிதைகள்

அறிவுச்சுடர் அம்பேத்கர் 013

30 மார்ச் 2023 744 பார்வைகள்
அறிவுச்சுடர் அம்பேத்கர்  013

அறிவுச்சுடர் அம்பேத்கர்
* அறிவை ஆயுதமாக்கி !
அடிமை விலங்கை உடைக்க
எப்படி முடிந்தது உன்னால் (உங்களால்)
* கல்லாமை இல்லாமையாக்கும் !
எழுத்தறிவே ஏற்றம் என்று
ஏட்டை பிடிக்க –
எப்படி முடிந்தது உன்னால்

* தரை அமர்ந்து கற்று
தரணி போற்றும் அரியாசனம்
தனி ஆசனம் பெற்றிட
எப்படி முடிந்தது உன்னால்
* வறுமையின் வாயிலை திறக்க
ஏடும் எழுதுகோலும்
சாவி என்று கணித்திட
எப்படி முடிந்தது உன்னால்
* ஒதுக்கி, ஒடுக்கி, தனித்து தடுத்த
அவமானங்களை வெகுமானமாக்கி 
புத்தகம் ஏந்திட
எப்படி முடிந்தது உன்னால்
* பின்தள்ளி பின்னே தள்ளிய வர்க்கத்திடம்
முன் செல்ல, முன்னே செல்ல
எழுதுமுனையை எடுக்க
எப்படி முடிந்தது உன்னால்
* மனிதனை மனிதனாக்க
மனிதத்தை சட்டமாக்க
எப்படி முடிந்தது உன்னால்
* பொருளியல், அரசியல், மெய்யியல்
மை இயலால் நினறத்திட
எப்படி முடிந்தது உன்னால்
*அறிவைத் தேடி ஓடினால்
அகிலம் வாழ வாழ்வோம் !
அழியாத வரலாறு காண்போம் !
என்று அன்றே கணித்திட
எப்படி முடிந்தது உன்னால்!
உங்களால்!
சமர்ப்பணம் சட்ட மேதைக்கு !
மரியாதை மாமேதைக்கு !

-எ.விக்னேஸ்வரி எம்ஏ பிஎட்
ஆசிரியை
ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. ஆவாரம்பாளையம்.
கோவை -6.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE