புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, பெண்கள், பெண்கள், கவிதைகள்

ஒளிவிளக்கு அம்பேத்கர் 027

02 ஏப்ரல் 2023 640 பார்வைகள்
ஒளிவிளக்கு அம்பேத்கர் 027

சட்டம் இயன்ற ஒளி விளக்கு மாமேதை அம்பேத்கர்.....!

பாரினில் சட்டம் பயின்று
   நம் பாரத தேசத்திற்கு....

  நாட்டு மக்கள் நலன் பெற
  சட்டம் இயற்றிய.....
 மாமேதை அம்பேத்கர்!

 நூல்கள் பல படித்து
 நூற்றாண்டுகள் பல பேசப்பட்ட....
 மாமனிதர் அம்பேத்கர்!

திக்கு திசையெங்கும் 
அவரை அறியாத மனிதர்கள் உண்டோ!
காலங்கள் உருண்டாலும்
நாட்கள் கரைந்தாலும்
நாட்டுக்கு அவர் புரிந்த
நன்மைகள் அழியாது!

இத் தேசத்தின் சட்டமெனும்
சுடர் விளக்கிற்கு.....
தூண்டு கோலாய்
இத்தேசத்து தலைமகனாய் இருந்த....
அறிவின் ஒளிவிளக்கு அம்பேத்கர்!

சொல்வதற்கு நல் சொற்கள் தேவை
நம் சொந்த நாட்டிற்கு.....
இவரைப் போன்று 
இம்மண்ணில் ஜனிக்க
நல் மனிதர் தேவை!

ஆம்!

அரும்பாடுபட்டு ஆற்றிய
அவரின் தொண்டுகள்....
நிறைகுடம் போல் தளும்பாது
நிலைத்திருக்கும் என்றென்றும்....
இந்நாட்டினில்......
ஆறாத  விழுப்புண்களாய்!!


கவிஞர் கே.நஜீமா ஜமான் ,
நாகூர்
நாகை மாவட்டம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE