புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, பெண்கள், பெண்கள், கவிதைகள்

புரட்சியாளர் அம்பேத்கர் 007

28 மார்ச் 2023 625 பார்வைகள்
புரட்சியாளர் அம்பேத்கர் 007

புரட்சியாளர் அம்பேத்கர்..

மக்களாட்சி வேண்டும்
புரட்சி நிலை ஏறி
மன்னர் ஆட்சி வேண்டாம் 
மிரட்சி நிலை  மாறி 

இளமை கால கல்வி 
முதுமை கால வேள்வி
அம்பேத்காரின் பிறப்பு
வாழ்வின் நல்ல சிறப்பு

உணவு நீருக்கு குற்றம்
நெருங்கி வந்தாள் சீற்றம்
தனிமையிலே இருட்டு
பார்வையிலே வெளிச்சம்

ஒதுக்கும்  இடமை ஒழிப்போம் 
ஓட மடமை வெறுப்போம்
ஓடி பாடாத அண்ணல்
மேடை ஆடிய மின்னல்

ஆடு பலி உண்டு 
ஆட்டு வித்த அண்ணல்
சிங்கம் பலி உண்டா
சூளுரைத்த கண்ணல்
 
குருவை மிஞ்சிய சீடன்
பெயரை முந்தைய ஏகன்
மன்னர் அளித்த உதவி
எளியோர் அடைந்த பதவி

இன்னலையும் கடந்தார்
வாழ்வினிலே சிறந்தார்
முயற்சி என்பது உண்டு
துணிவு வானில் கண்டு
 

படைத்தலைமை உதறி
தன்மானத்தால் எகிறி
மீண்டும் வந்த சுதேசி
விதேசி செல்ல உயறி

தீண்டாமையும் இல்லை
சாதி சண்டையின் எல்லை 
கூட்டணியின் முயற்சி
ஆதிக்கனின் வீழ்ச்சி

சட்டம் எல்லாம் வேண்டும்
பாகு பாடு வேண்டாம்
தனிப்பிரிவு  இன்று
பாட்டாளி என்று ஒன்று

அமைச்சர் பதவி நின்று
அரசியல் பிரிவை மென்று
வரையறையும் வகுத்து
வாழ்வை எல்லாம் தொகுத்து

பௌத்த மதத்தின் ஈர்ப்பு
ஆத்ம நிலையின் ஒளிர்ப்பு
நித்திரையின் உறக்கம்
விழித்திரையின் கலக்கம்

விண்ணுலகம் சென்றும்
மண்ணுலகில் என்றும்
மண்ணின் மைந்தன் வாழ்க
நமது மறுமலர்ச்சி வெல்க..

-லாவண்யா, துறையூர்,

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE