புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
கட்டுரைகள், கட்டுரைகள், கவிதைகள்

தம்பதியினர் தினம்

30 மே 2023 1,855 பார்வைகள்
தம்பதியினர் தினம்

தம்பதியர் தினம்..

*நீயே என்வாழ்வின் ஆதாரமே*
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
 என்றோ இணைய இறைவன் படைத்த பொக்கிசமே

இணைந்தே வாழ்ந்திட
இதயமும் ஏங்கிட
குற்றலச்சாரலென
வந்தவளே

எந்தன்
கோமேதகமே
நீயின்றி நானில்லை
நிலவின்றி வானில்லை

உன்னையன்றி எனக்கு வேறு யாரும் அன்பே
கண்ணுக்குள் நுழைந்து
உயிருக்குள் பதியமிட்டே
எந்தனது
வானவில்லே

வண்ணம் மாறிடவே
வாழ்வின் வண்ணம்
மாறிடவே
உன்னையே வண்ணம் மாற்றிய எண்ணமான
எந்தனுயிரே

பசி தூக்கம் மறந்து
சுய விருப்பம் ஒதுக்கி
எனக்கென
அனைத்தையும்
மாற்றிக கொண்டே
மாற்றந்தந்தவளே
என்னுயிரானவளே

அல்லியைப்போல
முல்லையைப்போல
மல்லிகையைப்போல
மணக்க வந்தவளே
எனை மணந்தே நின்றவளே
மனதில் நின்றவளே

எந்தனது பூபாளமே
உந்தனது
நாமமே
எந்தனது
பல்லவியானவளே
பல்லாண்டு வாழ்ந்திடு நீயே எந்தன் வாழ்வின் ஆதாரமே


முனைவர்
கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE