புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அமுத கவிச் சுடர் விருது , அமுத கவிச் சுடர் விருது , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

சுதந்திர காற்றை சுவாசிப்போம்...18

15 ஆகஸ்ட் 2022 994 பார்வைகள்
சுதந்திர காற்றை சுவாசிப்போம்...18

சுதந்திர காற்றை சுவாசிப்போம்...

தன்னுயிரை தாய்மண்ணுக்கென தந்து விட்டு
 தலைநிமிர்ந்த உள்ளங்களின் தலைநகரம் - எனது பாரதம்.....
சாதி சமயங்களில் சங்கமித்த போதும் 
வேற்றுமையிலோர் பெருமைமிகு ஒற்றுமை - எனது பாரதம்.....
இமயத்தின் உச்சிமுகர்ந்து குமரியின் கோடிகாண
 இயற்கையின் ஈடில்லா நன்கொடை - எனது பாரதம்
வலிய ஆன்றோரும் சான்றோரும் அள்ளித்தந்த 
அரிய எழுத்துக்களின் அழகியநூலகம் - எனது பாரதம்....
பார்போற்றும் நல் பழம்பெரும் பாரதம்
விண்தாண்டிய ஓர் புதுயுகமும்  எனது - பாரதம்....
 தொல்லைகளது துரத்தி வந்தாலும் - எல்லைகளது 
யவரும் மீறாது காத்திடும் - எனது பாரதம்.... 
ஆறறிவின் அர்த்தங்கள் அனைவரும் உணர்ந்திட
 அனுபவங்களின் ஆகச்சிறந்த பாடங்களும் புரிந்திட  
ஓயாது உழைத்திடும் அற்புதம் - எனது பாரதம் 
அளவில்லா கலைகளது அமுதமென சுரந்திடும் 
அட்சயப் பாத்திரமும் - எனது பாரதம்.....
இதோ ! சுதந்திர காற்றை சுவாசிப்போம் வா
உச்சி முகந்து அழைக்கிறது - எனது பாரதம்......
                                                                                         சு.சுஷ்மிதா,

பாப்பிரெட்டிபட்டி.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE