புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

காதலால் சபிக்கப்பட்டவள் ...!

27 டிசம்பர் 2022 622 பார்வைகள்
காதலால் சபிக்கப்பட்டவள் ...!

காதலால் சபிக்கப்பட்டவள்... 

விட்டத்தை நோக்கி
விரிந்திருக்கும் விழிகளின் ஓரங்களில்
வழிந்தோடும் கண்ணீரில்
நினைவுத் திவலையாய்
நீயே நிறைகிறாய்... 

நீ எனக்கானவன் இல்லையெனும்
ஏமாற்றத்தின் வலியினை
இறக்கிவிட துணியாமல்
தூக்கி சுமக்கிறது மனம்.. 

ஆம்... 
அனுதினமும்
நின் நினைவுகளை 
இலகுவாய் தூக்கி சுமந்த மனமோ
கணக்கின்றி கனக்கிறது.. 
எனது விழிகளை மறைத்த 
நின் காதலோ
இன்று என் கழுத்தினை 
நெறித்துக் கொண்டிருக்கிறது... 

நீ நீயாகத்தான் இருக்கிறாய்
எந்தன் பிரிவோ வலியோ
ஏதொன்றும் உன்னை
சற்றும் பாதித்திருக்கவில்லை.. 
அப்படியிருக்க... 
நான் மட்டும் ஏன்?
நின் நினைவுகளை சுமக்கும்
உயிரற்ற சடலமென 
வீழ்ந்தே கிடக்கிறேன்... 
காதலால் சபிக்கப்பட்டவளா நான்?...

சசிகலா திருமால்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE