புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

வானொலி தினம்

13 பிப்ரவரி 2023 1,704 பார்வைகள்
வானொலி தினம்

வானொலி

வானலை வழியே
வான ஊர்வலமாய்
கானம் பாடும்
கலையான வானொலியே

இசையினை அள்ளி
இன்பமாய்த் தெளிக்கிறாய்
வசையினை பேச்சாக
வாரி வழங்குகின்றாய்

அனைவர் இல்லத்திலும்
அணைத்திடும் பிள்ளையாய்
காதோடு பேசிடும்
காதலும் நீயே

உன்னால் எல்லோர்
உள்ளமும் மகிழும்
அறிவுசார் கதைகளும்
வினா விடைகளும் 
நாடகங்களும் சிறுகதைகளும் இனிய நிகழ்ச்சி நிரல்களும்

அற்புதமாய் நடத்தி
அறிவினைப் புகட்டுவாய்
தேனமுது கானமும்
தேனருவியாய்  கொட்டிடும்
எண்ணற்ற மனங்கள் கவலைகள் மறந்து
உன் கீதம் இசைத்திடுவரே
வானொலியாக செவிக்கு விருந்தாக
வலம் வரும் நீ வாழிய பல்லாண்டு
தொடரட்டும் உன் சேவை

கிருஷ் அபி இலங்கை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE