சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
பெண்மை
பெண்மை
தனக்கே வலித்தாலும் தன்னை
நேசித்தவர்களுக்கு வலிக்க
கூடாது என்று நினைப்பது தான்
பெண்களின் குணம்..!
பெண்கள் ரோஜா செடி
போன்றவர்கள்...
கல்லும் இருக்கும்...
முள்ளும் இருக்கும்...
கல் கலையாவதும்...
முள் முளையாவதும்...
பெண்களின்
கைகளிலே தான் உள்ளது..!
அழகென்றும்...
அறிவென்றும்...
கருப்பென்றும்...
சிகப்பென்றும்...
அடையாளம் எத்தனை..?
அனைத்திலும் சிறப்பு பெண்மை..!
-வே. சாந்தி,
இடைநிலை ஆசிரியர்,
சொக்கலால் சரஸ்வதி சத்திரிய வித்யா சாலா ஆரம்பப்பள்ளி,
முக்கூடல்.
திருநெல்வேலி மாவட்டம்.