பாவை பருவங்கள்
பாவை பருவங்கள் – முன்னுரை
பெண்ணைப் பற்றி பலர் எழுதினர். அவளின் அழகைப் பற்றி, அவளின் தியாகத்தைப் பற்றி, அவள் சுமக்கும் பொறுப்புகளைப் பற்றி…
ஆனால் ஒரு பெண்ணின் மனதுக்குள் அவள் மட்டும் உணரும் பருவங்களை அவள் சொந்த குரலில் எத்தனை பேர் எழுதியிருக்கிறார்கள்?
இந்த நூல் ஒரு கற்பனை அல்ல. ஒரு பெண்ணின் உள்ளத்தில் நடந்த உண்மையான பயணம்.
நான் ஒரு பெண். அதனால் இந்த வரிகளில் இருக்கும் ஒவ்வொரு உணர்வும் நான் உணர்ந்த உணர்வுகள்.
என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், நான் பார்த்த அனுபவங்கள், நான் கற்ற பாடங்கள், நான் உள்ளுக்குள் தாங்கிய அமைதியான வலிகள், நான் சிரித்த தருணங்கள்…
இவை அனைத்தும் இந்த கவிதைகளில் ஒரு பிரதிபலிப்பாக நிற்கின்றன.
ஒரு பெண்ணின் வாழ்க்கை ஒரே கதையல்ல. அது பல பருவங்களின் பயணம்.
அந்தப் பயணத்தை “பாவை பருவங்கள்” என்ற இந்தக் கவிதைத் தொகுப்பில் ஒவ்வொரு பருவத்திற்கும் பதினைந்து கவிதைகள் என என் மனத்தின் குரலாகப் பகிர்கிறேன்.
இது என் வாழ்க்கை மட்டும் அல்ல. பல பெண்களின் மௌனமான உணர்வுகளின் பிரதிபலிப்பு.
இந்தப் பக்கங்களைப் படிக்கும் போது ஒரு பெண்ணின் இதயம் எப்படி பேசுகிறது என்பதை நீங்கள் உணருவீர்கள்.
“பெண்ணின் வாழ்க்கை ஒரு கதை அல்ல… ஒரு பயணம்.
அந்த பயணத்தின் ஒலி தான் – ‘பாவை பருவங்கள்’.”
ஒரு பெண்ணின் வாழ்க்கையை
ஒரு சொல்லில் வரையறுக்க முடியாது.
அவள் ஒரு நாளில் உருவாகும் மனிதர் அல்ல;
பல பருவங்களின் பயணத்தில் உருவாகும் ஒரு உலகம்.
ஒரு மலர் எப்படி
மொட்டாகத் தொடங்கி மலராகி மணம் வீசுகிறதோ,
அதேபோல்
ஒரு பெண்ணின் வாழ்க்கையும்
பல மாற்றங்களின் வழியே வளர்கிறது.
அந்த மாற்றங்கள்
வயதின் மாற்றம் மட்டும் அல்ல.
மனதில் நிகழும் உணர்வுகள்,
அனுபவங்கள்,
சோதனைகள்,
வெற்றிகள்,
தோல்விகள்—
இவை அனைத்தும் சேர்ந்து
ஒரு பெண்ணின் வாழ்க்கையை
புதிய பருவங்களாக மாற்றுகின்றன.
அதனால்
பெண்ணின் வாழ்க்கையை
சாதாரணமாகப் பேசப்படும் சில பருவங்களாக அல்ல,
நான் உணர்ந்த அனுபவங்களின் அடிப்படையில்
பன்னிரண்டு பருவங்களாக
இந்த நூலில் பிரிக்கிறேன்.
இந்த பன்னிரண்டு பருவங்களும்
ஒரு பெண்ணின் வெளிப்படையான வாழ்க்கையை மட்டும் அல்ல,
அவள் உள்ளத்தில் நடக்கும்
அமைதியான மாற்றங்களையும் பேசுகின்றன.
ஒவ்வொரு பருவத்திலும்
ஒரு பெண் எப்படி சிரிக்கிறாள்,
எப்படி தன்னைத் தேடுகிறாள்,
எப்படி வலிகளை தாங்குகிறாள்,
எப்படி வலிமையாக மாறுகிறாள்—
அந்த எல்லா உணர்வுகளையும்
இந்தக் கவிதைகள் சொல்லப் போகின்றன.
அதனால்
இந்த நூலில் வரும் பன்னிரண்டு பருவங்கள்
ஒரு பெண்ணின் வயது பயணம் அல்ல;
அவள் மனத்தின் பயணம்.
பாவை பருவங்கள் – 12 பருவங்கள்
1. மழலைப் பருவம்
உலகம் முழுக்க புதுமையாகத் தோன்றும், சிரிப்பு மட்டுமே நிறைந்த காலம்.
2. ஆர்வப் பருவம்
எல்லாவற்றையும் கேட்டு அறிய விரும்பும் மனம். “ஏன்?” “எப்படி?” என்ற கேள்விகள் நிறைந்த பருவம்.
3. மாற்றத்தின் பருவம்
உடலும் மனமும் மாறத் தொடங்கும் தருணம். பெண் தனது தனித்தன்மையை உணர ஆரம்பிக்கும் காலம்.
4. கனவுப் பருவம்
வாழ்க்கையை பற்றி பெரிய கனவுகள் உருவாகும் நேரம்.
5. உணர்வுப் பருவம்
மனம் மிகவும் நெகிழும் காலம். நட்பு, பாசம், காதல் ஆகிய உணர்வுகள் ஆழமாக தோன்றும்.
6. எதிர்ப்புப் பருவம்
“நான் யார்?” “என் வாழ்க்கை என்ன?” என்று தன்னையே கேட்கத் தொடங்கும் பருவம்.
7. பொறுப்புப் பருவம்
குடும்பம், உறவுகள், வாழ்க்கை — எல்லாவற்றையும் சமநிலையுடன் தாங்கும் நிலை.
8. தியாகப் பருவம்
தனது ஆசைகளை விட பிறரின் மகிழ்ச்சியை முன்னிலைப்படுத்தும் பருவம்.
9. தன்னறிதல் பருவம்
வாழ்க்கையின் அர்த்தத்தை மெதுவாக புரிந்து கொள்ளும் காலம்.
10. வலிமைப் பருவம்
பல சோதனைகளை கடந்து மனதில் உருவாகும் உறுதி.
11. அறிவுப் பருவம்
அனுபவங்கள் அனைத்தும் அறிவாக மாறும் நிலை.
12. ஒளிப் பருவம்
மற்றவர்களுக்கு வழிகாட்டும் ஒளியாக மாறும் இறுதி பருவம்.
1. மழலைப் பருவம்
1.
சின்ன கால் துடிப்பில் காத்திருக்கும்,
கண்ணில் மின்னும் சிரிப்பின் வெளிச்சம்,
வாசலில் குதூகலமாய் ஓடிய நிமிடங்களும்,
சுவரில் வண்ணங்கள் தீட்டிய நாட்களும்,
மழலை காலத்தின் கதை
சொல்லுமே.
2.
மிட்டாயை கடிகாரம் அணிந்தது
கால்களை நீரில் குளித்தது,
சிறுமியை துணி மறைத்து கொண்டு.
மேஜையில் ஏறி ஆடித்து,
கூச்சல் கொண்டு பேசித்து,
சின்ன சிரிப்பில் உலகம் பொங்கியது,
மின்னல் போல சிந்தும் குழந்தை உலகம்.
3.
பந்து கைப்பிடித்து ஓடி,
பூங்காவில் குதித்து சுற்றி,
மண் மழையில் கை நனைத்து,
சின்ன கூரையில் ஏறி குதித்து,
கோலத்தில் கால்கள் தள்ளி,
கூச்சல் கூடவே பாடும் உலகம் குழந்தை .
4.
கண்ணில் கனவு மலரும்,
கையில் பொம்மை சுழலும்,
மண்ணில் கோட்டை கட்டும்,
மழையில் நனைந்து சிரிக்கும்,
பூவை பறித்து ஓடும்,
பாட்டை தானே பாடும்,
பாவையின் உலகம் இனிமையாய் மலரும்
5.
பாவாடை ஆடி சிரிக்கும்,
பள்ளிக்கு பையில் ஓடும்,
தோழிகள் சேர்ந்து விளையும்,
காகிதம் மீது வரைவும்,
மணலில் கோட்டை கட்டவும்,
விழிகளில் கனவு மலரும்—
மனதில் இனிய நினைவாய் நிற்கும்.
6.
அம்மாவின் மடி தேடும்
அப்பாவின் தோள் ஏறும்
சின்ன சிரிப்பு மலரும்
சுற்றிலும் ஓடி விளையும்
பொம்மைகளை தூக்கி வீசும்
மழலை மொழியில் உலகமே உருகச் சொல்லும்
7.
கண்ணில் விழிகள் துள்ளும்
கன்னத்தில் குழிகள் விழும்
சின்ன நடை தடுமாறும்
சுற்றிலும் சிரிப்பு பரவும்
வீட்டெங்கும் ஓடி திரியும்
மழலை மொழிகள் ஒலிக்கும்
இதயம் முழுவதும் இன்பம் மலரும்.
8.
முகத்தில் ஒளிகள் பூக்கும்
முழங்காலில் நடைகள் பிறக்கும்
விழியில் ஆச்சரம் நிறையும்
விரலில் உலகம் சுற்றும்
அழகான சத்தங்கள் பிறக்கும்
அன்பின் நிழல்கள் நீளும் —
அந்த மழலை உலகம் என்றும் மலர்ந்திடும் ...
9.
புன்னகை பூக்கள் திறக்கும்
பருவம் மெதுவாக நகரும்
விழிகள் வானம் தொடும்
விரல்கள் காற்றை பிடிக்கும்
மொழிகள் இசையாகும்
உலகம் அருகில் வரும்
சிரிப்பு துளிகள் சேர்ந்து நாள்கள் மலர்கின்றன .
10.
அடுப்பின் அருகே நின்று
அம்மியை கையில் சுழற்றி
பாத்திரம் கீழே உருட்டி
அரிசியில் கைகள் புதைத்து
சுவற்றில் கை பதித்து
வாசலில் வெளியே ஓடும்
காற்றோடு கலந்து குறும்புகள் பறந்தது.
11.
கதவை திறந்து இழுத்து
செருப்பை தலைக்கு வைத்து
பையில் பொருள் எடுத்து
காகிதம் கிழித்து வீசி
அலமாரி ஏறி பிடித்து
ஜன்னலில் வெளியே பார்க்கும்…
சுறுசுறுப்பால் நாள் முழுதும் சுழலும்.
12.
தொலைபேசி கையில் பிடித்து எண்களை அழுத்தி விளையாடி
ரிமோட்டை எடுத்துப் பிழிந்து
திரையை தட்டிக் குலைத்து
குடுவையை கீழே சாய்த்து
தரையில் உருட்டி சிரிக்கும்
நெஞ்சம் வானம் தொட்டு பறந்தது.
-கவிஞர் சைலஜா கணேசன்