magizhchifm2020@gmail.com சனி, 07 November 2026
⚡ சமீபத்திய
தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்!
கவிதைகள்

மகிழ்ச்சி FM மனிதநேய பண்பாளர் விருது & நல்லாசிரியர் விருது விழா

15 டிசம்பர் 2025 Magizhchi FM 406 பார்வைகள்
மகிழ்ச்சி FM  மனிதநேய பண்பாளர் விருது & நல்லாசிரியர் விருது  விழா

தேனி | டிசம்பர் 13, 2025
மகிழ்ச்சி FM மற்றும் மகிழ்ச்சி பவுண்டேஷன், லைஃப் இனோவேஷன் பப்ளிக் பள்ளி இணைந்து நடத்திய “மனிதநேய பணியாளர் விருது & நல்லாசிரியர் விருது – 2025” வழங்கும் விழா, தேனி லைஃப் இனோவேஷன் பப்ளிக் பள்ளி வளாகத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
மனிதநேய சேவை, கல்வி மேம்பாடு, சமூக நலன், இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மனிதநேய பண்பாளர்கள் மற்றும் சிறந்த ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகளால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த விழாவிற்குத் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தங்கத் தமிழ்செல்வன், சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு விருதுகளை வழங்கி  மனிதநேயப் பணிகளும் ஆசிரியர்களின் சேவையும் சமூக வளர்ச்சிக்கான உறுதியான அடித்தளம் என தனது சிறப்புரையில் அவர் பாராட்டினார்.
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார்   சிறப்புரையாற்றினார்.
கவிஞர் அரிமா. சைலஜா வரவேற்புரையாற்றினார்.
மூத்த ஊடகவியாளர் மற்றும் மகிழ்ச்சி பவுண்டேஷன் நிறுவனர் முனைவர் ஜெ. மகேந்திரன் விழா நோக்க உரையாற்றினார்.
P. கலைக்கதிரவன், கூடுதல் கண்காணிப்பாளர், தேனி, தலைமை தாங்கினார்.

அரிமா.டாக்டர் R. நாராயண பிரபு முன்னிலை வகித்தார்.
மேலும், கோவில்பட்டி தனி தாசில்தார் ராஜ்குமார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் வ ஹரிஹரன்,முனைவர் ஆ. சந்திர புஷ்பம்,முனைவர் இரா. சிவகுமார்,தேனி மு. சுப்பிரமணி,ந. அம்பேத்கார், டாக்டர். M. ஷேக் முஜிபர் ரஹ்மான்,கூ. தங்கேஸ்வரன், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, ஹைவேளில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். டாக்டர். எம் ஸ்ரீ லட்சுமி துர்கா நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சியை ஆ. ஜெபசிந்தி  தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில் கௌரவ விருந்தினர்கள், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சமூக சேவகர்கள், மகிழ்ச்சி எஃப்எம் நண்பர்கள் கிளப் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பை மகிழ்ச்சி  பண்பலை மற்றும் மகிழ்ச்சி பண்பலை பிரண்ட்ஸ் கிளப் குழுவினர்  மேற்கொண்டனர். விருது பெற்றவர்களின் சேவைகளைப் பாராட்டி, சமூகத்தில் மனிதநேயச் சிந்தனைகளை வளர்க்கும் நோக்கில் நடத்தப்பட்ட இவ்விழா பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE