புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு
கதைகள், கதைகள், கவிதைகள்

மகாத்மா காந்தி...

01 அக்டோபர் 2022 973 பார்வைகள்
மகாத்மா காந்தி...

காந்தி கவிதை 

உலக வரைபடத்தில் இந்திய தேசத்தை

உலகிற்கு தெரியவைத்த  இந்தியர் மகாத்மா! 

ஒரு பிரச்சினைக்கு  உண்ணா நோன்பு

ஒன்றே தீர்வு தருமென்றவர் மகாத்மா! 

உடல் தாங்காது என்று போதுமே

உண்ணா நோன்பினை ஒரு தவமாக

உண்ணா நோன்பிருந்த 'யோகி' மகாத்மா! 

'என் பிணத்தினிலே
தேசப்பிரிவினை நடக்கும்'

என சூளுரைத்த தேசப்பிதா மகாத்மா! 

எதிர் எதிராக செயல்பட்ட இருபிரிவினரை

இணங்க வைத்த 'சமாதானத்தூதர்' மகாத்மா! 

மன வலிமைக்கும் அகிம்சைக்கும் இலக்கணம்

வகுத்த முதல் 
மனிதர் மகாத்மா! 

வாழும் காலம் வரையிலே மகாத்மா! 

மானுடத்திற்கு நல்வழி காட்டியவர் மகாத்மா! 

அரையாடை அணிந்து மேலாடை தவிர்த்தவரே! 

ஆண்டித் தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டவரே! 

ஒத்துழையாமை இயக்கம் செய்தவரே! 

ஒவ்வொரு இந்திய ஆன்மாவையும் தொட்டவரே! 

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரைப் பிடிங்கியவரே! 

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முடிவுரையை எழுதியவரே! 

இறைவா! இந்த
மானுடம் தழைத்தோங்கவே

மறுபடி மகாத்மா 
பிறக்க வேண்டுமே! 

- திருக்குறள் தூதர்
 க. விஜயசாமுண்டீஸ்வரி
சென்னை.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE