புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு
கட்டுரைகள், கட்டுரைகள், கவிதைகள்

தேசப்பிதாவை வணங்குவோம்...

01 அக்டோபர் 2022 1,016 பார்வைகள்
தேசப்பிதாவை வணங்குவோம்...

தேசப் பிதாவை வணங்குவோம்...

சத்திய வழியில் வாழ்ந்து காட்டியவர்! 
சத்தியாக்கிரக உணர்வை ஊட்டியவர்! 
சாதிமதபேதங்கள(ற்)ற வழிகாட்டியவர்! 
போதிமரம் போல் புத்திமதி ஊட்டியவர்! 

இந்திய மக்கள் நித்திரை   கலைத்தவர்! 
இந்தியா எங்கும் யாத்திரை நடந்தவர்! 
ஆங்கிலேயரைப் பாடாய்படுத்தியவர்! 
ஓங்கி ஒத்துழையாமை நடத்தியவர்! 

அன்பு அகிம்சை இரு கண்களானவர்! 
உண்மை பேசுவதிலே உறுதியானவர்! 
வெள்ளையனுக்கு சொப்பனமானவர்! 
நல்லவருக்கு என்றும் நல்லவர் ஆனவர்! 

மனிதக் கழிவை அவரவர் சுத்தம் செய்த
மனித மாண்பைக் கற்றுக் கொடுத்தவர்! 
சரிநிகர் சமமான சமூகம் மலர்வதற்கு
சபர்மதி ஆசிரமம் நிறுவிய புனிதர்! 

சிக்கலான பிரச்சனைகளைத் தீர்த்தவர்! 
சிக்கனமான வாழ்க்கை மேற்கொண்டு
எக்கணமும் அதிசிறந்த  நம் பாரத நாடு
திக்கெட்டும் புகழ் மணக்கச் செய்தவர்! 

சுத்தமல்லி உமாஹரிஹரன்
திருநெல்வேலி

முனைவர் வ ஹரிஹரன்
இணைப்பேராசிரியர் தமிழ்த்துறை
ப. மு. தேவர் கல்லூரி
மேலநீலிதநல்லூர்
சங்கரன்கோவில் 627953

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE