புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

எழுத்தறிவு தினம் கவிதை

08 செப்டம்பர் 2023 2,811 பார்வைகள்
எழுத்தறிவு தினம் கவிதை

எண்ணும் எழுத்தும்
கண்ணே

கல்வியே கண்ணாய்
கற்றல் கலையாய்
வெல்லமாய் இனிக்கும்
வெகுமதிக் கல்வியே

எழுத்துக்களை அறிந்து 
எழுதிடும் அறிவே
பழுத்துக் கனிந்த
பலாச்சுளை போல்

உலகை அறிந்து
உன்னதமாய் வாழ்ந்திட
பலதும் கற்று
பண்டிதராய் ஆகிட

புலமைகள் சிறக்க
புதுமைகள் பிறக்க
பலமான ஊன்றுகோல்
எழுத்தாற்றல் திறமையே

மனிதனுக்கு மண்ணில்
மகத்துவம் கொடுக்கும்
தனித்துவத்தை ஓங்கிட
 தளராது வளர்க்கும்

மடமை அகற்றும்
மன்மதப் பாணம்
உடைமைகளை உரியதாய் 
உலகிற்குக் கூறும்

உண்மையை உடைத்திடும்
உறுதியான சான்று
விண்ணையும் விவரிக்கும் 
விளைச்சலின் சொத்து

எழுத்தறி வித்தவன் 
எப்போதும் இறைவனாய்
போற்றியே புகழுவோம்
புத்தியின் சித்திரமாய்

தமிழ்நதி கிருஷ் அபி

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE