புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு
மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், கவிதைகள்

பாரதியே மீண்டும் பிறந்து வா...! 045

30 நவம்பர் 2022 679 பார்வைகள்
பாரதியே மீண்டும் பிறந்து வா...! 045

பாரதியே மீண்டும் பிறந்து வா

எட்டய புரத்தின் எழில்மிகு முத்தே 
எழுதிடும் கவிஞரின் புகழ்மிகு சொத்தே 
கவிஞர் பலரது கவின்மிகு வித்தே 
காவிய மாகிய கவியிளங் கொத்தே

சின்னச் சாமியின் சீர்மிகு புதல்வரே 
வண்ணக் கவிஞரின் வனப்புறு முதல்வரே 
எண்ணச் சிறகினை விரித்திடும் கவிஞரின் 
ஏணியாய் எழுந்தவரே மகாகவி பாரதியே

பெண்ணியம் போற்றிய பேறுடை நற்றவரே 
கண்ணிய மானதோர் கவிதையின் கொற்றவரே 
திண்ணிய நெஞ்சுடன் தீரமாய் எதிர்த்தவரே 
மண்ணிலே அடிமையின் மாசினைத் துடைத்தவரே

எண்ணம் சிறந்தால் எதிர்காலம் சிறக்குமென 
எண்ணிலா பாக்களில் எளிமையாய்ச் சொல்லியே 
எண்ணரும் சிந்தனை ஏற்றமிகு பாக்களால் 
கண்ணென மாதரை  தரணியாள அழைத்தவரே

புரட்சிக் கவிகளே மிரட்சி கண்டிட 
திரட்சிக் கவியினால் தீர்க்கமாய் உரைத்தவா 
கற்பனையின் சிறகினால் காலமெலாம் பறந்தவா 
அற்புதக் கவிதர மீண்டும் பிறந்துவா!   

அஃறிணையும் போற்றியே  அழகுதமிழ் சாற்றியே 
ஆன்றோராய் பாரதியாய் அருந்தமிழ் பகர்ந்தவா 
சான்றோராய் தீரமுடன் மீண்டுமாய் பிறந்துவா! 
 சரித்திரம் இயற்றுவோம் சாதனை படைத்திடுவோம் 

-செந்தமிழ்ச்சுடர் அ.செலஸ்டின் மகிமை ராஜ்,
வேம்பார்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE