பாரதி நினைவு தின கவிதை
மிரட்டுவார்களோ
என்று...
*பயந்து ஒளியவில்லை...*
திட்டுவார்களோ
என்று...
*பேச்சை* (உண்மையை) *குறைக்கவில்லை.*
பார் (உலகம்)
தி ( தீ) - பாரதி...
என்ன சொல்வார்களோ
என்று...
*எழுதுவதை*
*நிறுத்தவில்லை...*
பொறுப்பாக இல்லை
என்பதற்காக...
*சமூக சீர்திருத்தத்தை*
*கைவிடவில்லை...*
அவசியமில்லை
என்று...
*எதையும் அலட்சிய*
*படுத்தியதில்லை..*
திருந்த மறுக்கிறார்களே
என்று...
*முயற்சி செய்யாமல் இருந்ததில்லை...*
புரியாமல் இருந்து விடுவார்களோ
என்று...
*எளிய தமிழிலில் படைக்காமல் இருந்ததில்லை...*
தட்டிக் கழிக்கிறார்களே
என்று...
*கடமையை செய்யாமல் இருந்ததில்லை...*
முடக்கி போடுகிறார்களே
என்று...
*பெண் சுதந்திரத்தை*
*நிறுத்தவில்லை...*
கட்டுக் கதை, நயவஞ்சகம்,
சோம்பேறி தனத்தில்
விடுதலை வேட்கை குறைவு என்று...
*விடுதலை முழக்கத் தீயை அணைக்கவில்லை*
தீயப்பழக்கம்
தீண்டிவிடுமோ என்று...
பாப்பா பாட்டை படைத்தருளினார்..
எல்லாவற்றிற்கும்
போராடிய
மகாகவிஞன்
என்றென்றும்
நம் செயலில்
துணை நின்று
அருள் புரிய
எல்லாம் வல்ல இறையருளும் இயற்கையும்
துணை புரிய வேண்டுகிறோம்...
உங்கள் கவிஞர்
ப.சூர்யசந்திரன்