சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, சிந்தனைச் சிற்பி விருதுகள் சிறுகதைப்போட்டி, நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகள், கவிதைகள்
பாரதி ...! 005
பாரதி
பா விற்கெல்லாம் நீயே ரதி.
பாருக்கெல்லாம் பாட்டுடைத்தலைவன்.
கலைமகளில் அங்கம் நீ
கவிகளில் சங்க(ம)ம்.
தீண்டாமை பெண்ணடிமை என உயரப்பறந்த பருந்தெல்லாம் ஊர்க்குருவியானது உன்னால்.
செல்லம்மாவின் சுதந்திரமே இன்று நான்பிடித்திருக்கும் பேனாவின் ஒரு துளி மை.
மையலுக்காகத்தான் தையல் என்ற மடமையை ஒழித்து தையல் தரணியையும் ஆள்வாள் என நிரூபித்தாய் உன் தமிழால்.
எட்டையபுரத்து நாயகனே நீ ஏழைப்பாமரனின் ஏணி.
கழனி மக்களின் காவலனே ....... நீ காணாமல் போனதிலிருத்தது ஓயவில்லை பெண்களின் கண்களில் கண்ணீர்.
வாழ்க நீ எம்மான்.
வையகம் வாழும் வரை.
- பெ.ஜோதிலட்சுமி. இடைநிலையாசிரியை.
நகர்மன்ற கிருஷ்ணன் கோவில் தெரு நடுநிலைப்பள்ளி. ஸ்ரீவில்லிபுத்தூர். விருதுநகர் மாவட்டம்.6266125.