புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு
மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், கவிதைகள்

பூதலம் போற்றும் புனிதர் பாரதி...! 071

07 டிசம்பர் 2022 824 பார்வைகள்
பூதலம் போற்றும் புனிதர் பாரதி...! 071

பூதலம் போற்றும் புனிதர் பாரதி...

அன்னியர் ஆட்சியின் ஆதிக்கம் ஒழிக்கத்/
தென்தமிழ்  நாட்டில் பாரதி தோன்றினார்/
தன்னெழில் பூத்தத் தனித்தமிழ்ப் பாவலர்/
விண்ணதிர் இடியாய் வேட்கை கொண்டவர்/

அயலக நாட்டினர் ஆணவம் அழிந்திடப்/ 
புயலென எழுந்தார் பூமகன் பாரதி/
பயத்தில் பதராய் விளைந்த மாந்தரை/
புயத்தில் வலுவை விதைத்தார் வித்தகர்/

மாதர் இழிவின் மடமையை எரித்திட/
நாத இசையில் நற்றமிழ் பகன்றார்/
சேது சமுத்திரம் பாலம் அமைத்திட/
பேதம் இல்லா பண்பை உரைத்தார்/

ஆணும் பெண்ணும் சமமாய்க் கருதிட/
அதற்கும் கும்மிப் பாடலைச் சமைத்தார்/
கானம் பாடும் குயிலின் ஓசையைக்/
கவிதை வடிவில் வடித்துத் தந்தார்/

ஏழ்மை அடிமை வறுமை என்று/
எங்கும் இல்லா நிலைமை அமைய/
தோழமை கொண்டார் தேசியக் கவிஞர்/
தொழுதிடு பாரத தேசம் என்றார்/

கள்ளம் இல்லாக் குழந்தை உள்ளம்/
கனிவும் பணிவும் நிறைந்த நெஞ்சம்/
அல்லல் இன்றி வாழ்க்கை அமைய/
அறமாய் அன்பாய் வீரம் உரைத்தார்/

அடங்கி ஒடிங்கி முடக்கப் பட்டவர்/
ஆற்றல் கொண்டு உயர்ந்து வென்றிட/
வந்தே மாதரம் முழக்கம் செய்தார்/
சந்தத் தமிழாய்ச் சமத்துவம் படைத்தார்/

வள்ளுவர் மாண்பை வையகம் போற்றிட/
வற்றாத தமிழின் மானுட நெறியை/
உற்றார் உய்ய ஊற்றாய் இருந்தார்/
கற்பனைக் கெட்டாக் காவியம் படைத்தார்/

ஆங்கில அரசின் ஆட்சியை எதிர்த்து/
அடக்கிய பரங்கியர் பகையினை முறித்து/
புண்ணிய பாரதம் புனிதம் காக்க/
எண்ணிய சுதந்திரம் வேண்டி நின்றார்/

ஈதல் குணத்தால் இன்பம் கண்டவர்/
காதல் செய்தார் கன்னித் தமிழை/
பூதலம் போற்றும் புனிதர் பாரதி/
புகழாய் அமுதாய்ப் பொன்னுடல் நீத்தார்/

 -   பாவலர் சைதை பாலு,
சுண்டக்காமுத்தூர்
337/1 பி &டி காலனி A பிளாக்   விரிவு
89வது வட்டம்.
கோவை-10

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE