புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, பெண்கள், பெண்கள், கவிதைகள்
சிந்தனை சிற்பி அம்பேத்கர் 025
அம்பேத்கர்-சிந்தனை சிற்பி
அரசியல் சாசனத்தின் அரிச்சுவடி
ஒடுக்கப்பட்டவர்களின் விடிவெள்ளி
கல்வி எனும் ஆயுதம் கரை சேர்க்கும் என்ற போதனையாளன் நீ
ஆசிரியரை ஆண்டவனாய் பார்த்த செம்மல் நீ
உரிமைக்காய் போராடி சிந்தனை வளர்த்த சிற்பி
அனைவரும் சமம் என்ற கொள்கை போதித்த எங்கள் புத்தன் நீ
சமத்துவம் போதித்த
சட்ட நாயகன்
தீண்டாமை என்னும் தீயால்
உருவான வேள்வி நாயகன் மட்டும் அல்ல
நீ
கேள்வியின் நாயகனும் கூட
சாமனியனுக்கு சட்டம் போதித்த
சமத்துவ நாயகன்
ஒடுக்கப்பட்டவருக்காய் உதித்த
விடிவெள்ளி
- முனைவர். எட். பிரியதர்ஷினி,
உதவி பேராசிரியை,
வணிகவியல் துறை,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
திருநெல்வேலி