புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அறிவுச் சுடர் அம்பேத்கர் 054

07 ஏப்ரல் 2023 636 பார்வைகள்
அறிவுச் சுடர் அம்பேத்கர் 054

அறிவுச்சுடர் அம்பேத்கர். 
தமிழ் வருடப் பிறப்பில் மலர்ந்த தங்கமே
தன்னிகரற்ற தலைவன் நீயே 
பெற்றோர் இட்ட பெயர் வேறு
ஆசிரியர் மீது கொண்ட பேரன்பால்
அவர் பெயரை தன்னுடன் இணைத்தவரே
பட்டியல் இன மக்களின் பாதை நீரே
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று
ஏட்டளவில் இருந்த பொன் மொழியை
உண்மை என உரக்கக் கூறி உலகறியச்
செய்து ஊமை நெஞ்சில் பால் வார்த்தீர்
தீண்டாமையை கனல் வார்த்தைகளால்
தீயிட்டுக் கொளுத்தி தீபம் ஏற்ற வைத்தீரே
சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம் என்று
உரைத்த பாரதியின் கனவை நனவாக்கினீர்
தரணி போற்றும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மூளையே மூலாதாரமே
சட்டத்தின் வலிமையை சாமானியரும்
அறியச் செய்த அண்ணலே தியாகமே
ஒடுக்கப்பட்டோம் என்று ஒதுங்கிய
மக்களை சபைதனில் ஏற்றி சாதிக்கச் செய்தீர்
தரணி உள்ளவரை நின் புகழ் நிற்கும்..!


-ல. மதுமதி லட்சுமணன் உசிலம்பட்டி மதுரை மாவட்டம் ,உதவி தலைமை ஆசிரியை,

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE