JEE (MAIN)-2020 தேர்வு முடிவுகள் வெளியீடு 

0
107

JEE (MAIN)-2020 தேர்வு முடிவுகள் வெளியீடு

JEE (MAIN) தேர்வு செப்டம்பர் 1, 2020-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 6, 2020-ம் தேதி முடிவடைந்தன.

தேர்வுக்கு 8.58 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர்.

6.35 லட்சம் மாணவர்கள் தேர்வில் கலந்துகொண்டனர்.

2.2 லட்சம் மாணவர்கள் (சுமார் 25% பேர்) தேர்வெழுதவில்லை.

தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.

இதில் 24 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் 8 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

டெல்லியில் 5 பேர், ராஜஸ்தானில் 4 பேர், ஆந்திராவில் 2 பேர், ஹரியாணாவில் 2 பேர், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒருவர் 100% மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

தேர்வர்கள் jeemain.nta.nic.in என்ற இணைய முகவரி மூலம் தங்களின் விண்ணப்ப எண், கடவுச்சொல் மூலம் தேர்வு முடிவுகளை அறிய முடியும்.

JEE (MAIN) Paper 1 மற்றும் Paper 2-ல் முதல் 2.45 லட்சம் இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் JEE (ADVANCED) தேர்வை எழுதத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.
இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் IITக்களில் மாணவர்கள் படிக்க முடியும். JEE(ADVANCED) தேர்வு வரும் செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here