Wednesday, July 28, 2021

சமரச நாடகங்கள்…

புலன் ஐந்தையும் செயலிழக்கச் செய்யும் உந்தன் ஓரவிழிப் பார்வையில் வீழ்கிறேனடா நான்... கடலளவு நேசத்தில் கடுகளவு கோபம் என்ன செய்துவிடும்... மது குவளையில் விழுந்த மலரென... உந்தன் காதல் போதையில் விழுந்து தவிக்கிறேனடா... கிளைதனில் அமர்ந்த கிளியென சற்றே இளைப்பாறிக் கொள்கிறேன் உந்தன் தோள்தனில் தலை சாய்த்து.. சமாதானத்திற்கான சமரச...

நினைவுகளின் அழிப்பான்..

பசி எடுக்கையில் தன்னைத்தானே உண்ணுமாம் மூளை நரம்பான நியூரான்கள்... சற்றே விதிவிலக்காய் உந்தன் நினைவுகளை உண்ணத் தொடங்கிவிடுகின்றன எந்தன் மூளைச் செல்கள்... எந்தன் தலைமை செயலகத்திலிருந்து உந்தன் நினைவுகளை நீக்கிட ஏதேனும் அழிப்பான் இருந்தால் சொல்லேன் உனக்கு புண்ணியமாய் போகும்.... -சசிகலா திருமால் கும்பகோணம்

நுணலும் தன் வாயால் ..

நரம்பில்லா நாக்குதானே என்றெண்ணி தன்னிலை மறந்து நஞ்சு தடவி சற்றே நீண்டாலும்... உத்தமமற்ற வார்த்தைகளை உமிழ்நீர் என்றெண்ணி உமிழ்ந்துவிட்டாலும்... வெந்துத் தணியா வேதனையில் உழல்வதென்னவோ மனம் தான்.. சில நேரங்களில் அர்த்தமற்ற அநாவசியமான வார்த்தைகளை அபத்தமாய் உளறிக்கொட்டி அவதிப்படுகிறது.... தன் வாயால் கெடும் நுணலென... -சசிகலா திருமால்

இயல்பாய் புலரும் பொழுதுகள்…

மேகப்போர்வைக்குள் தன்னை மெதுவாய் இழுத்துக் கொண்டு இரவில் கண்விழித்த களைப்புத் தீர இளைப்பாறுவதற்காய் தன் இருப்பிடம் நோக்கி நகரும் சந்திரன்... புத்துணர்ச்சியுடனும் முகமலர்ச்சியுடனும் இந்த நாளை இனிதாய் துவங்கிட இரவைக் கிழித்து பகலைப் பகிர்ந்துக் கொள்ள கரம் நீட்டும் கதிரவன்... கீச்கீச்சென்று விதவிதமான குரலோசையில் தன் விடியலை...

பிரியாத இதழ் களை போல !

நான் ! நீ ! என்ற போது கூடாத, உதடுகளைப் போல!! தனிமையில் பயணித்து தவிக்காது!! நீயும் !நானும்!! என்றபோது பிரியாத இதழ் களை போல !! தனிமை வெறுத்து! உறவுகளோடு சேராந்தே பயணியுங்கள்!! -கவிதை மாணிக்கம்.

முதல் துரோகி…

என்னுள்ளே இருந்து கொண்டு சதா உன்னை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் என் முதல் துரோகி என் இதயம்... உன்னை நினைத்து துடிக்கும் இதயத்திற்கு இனி என்னுள்ளே என்ன வேலை இருந்துவிட போகிறது? எடுத்து சென்று விடடா உன்னோடு என் கவிதைக் காதலா.... -சசிகலா திருமால் கும்பகோணம்.

மௌன புன்னகை

உன் மௌனங்கள் கலைந்து!! மொழி இல்லாது மெதுவாக புன்னகைக்கிறது! இதயத்தின் வலி கலைந்ததோ !! அவன் பழம் நினைவுகள் பனி துளியென இதயத்தை கிள்ளியதோ!! ‌தாமரைமொட்டு இதழ்விரிப்பென என்இதயம் தொட்டு!! -கவிதை மாணிக்கம்.

வாடாத வளர்புத்தாய்…

உன்னை கருவறையில் சுமந்து பார்க்கவில்லை!! இதயகருவறையில் சுமக்கிறேன்! உதிரம் கொடுத்து உன்உயிரை!,வளர்க்க வில்லை!! என் உயிரை, கொடுத்தேனும் வளர்க்கிறேன்!! பெற்றவளுக்கு பாரமாகி தூரமானாயோ! எனக்கு !துயரம் போக்கி துள்ளி எழ!! என்வளர்ப்பு மகளானாயோ! பெற்றுவளர்பதிலே ஆனந்தமென்றால்! உன்னைதொட்டு வளர்ப்பதெனக்கு பேரானந்தமே!!! -கவிதை மாணிக்கம்.

அன்றலர்ந்த பொழுதாய்…

மீண்டும் மீண்டு மீள முடியாத உலகொன்றைத் தேடித்தேடியே தொலைகிறது என் இரவுகளின் பாதைகள்... கலைந்து சென்ற மேகங்கள் வரைந்துச் சென்ற ஓவியமென நிலவது எட்டிப்பார்த்து தன் கூட்டுக்குள் நுழைய அதிகாலை சூரியனோ பளிச்சென்று வெளிவர முயற்சிக்க... அந்த ஏகாந்த வேளைதனில் மழைக் குழந்தையின் அழுகையென சிறு தூறல்கள் சிதறிட... இதோ...

இருவிழிகள்..!

வானில் அதிக நட்சத்திரங்கள் மிளிர்ந்தாலும் நிலவைத்தேடும் விழிகளென மண்ணில் அதிகநட்புகள்! என் விழிகளில் தெரிந்தாலும்,,!! நிலவென உன்னைதேடி, தேர்ந்தெடுத்தே! என் இருவிழிகள்!! -கவிதை மாணிக்கம்.
error: Content is protected !!