புத்தகம் பொன்மொழிகள் (உலக புத்தக தினம்  ஏப்ரல் 23.)

0
47

உலக புத்தக தினம்  ஏப்ரல் 23.
1. அணுகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும்
ஆனால் புத்தகம்
திறக்கும் போதெல்லாம் வெடிக்கும்..

2. புத்தகத்தை நீங்கள் மேலிருந்து கீழ்ப்படித்தால்
கீழே இருக்கும் உங்களை மேலே உயர்த்தும் _
நெல்லை ஜெயந்தர்.

3. என் மனம் விரும்பும் நூல்களைக் கொடுங்கள்
வாழ்நாள் முழுதும் சிறையில் வாழ
சம்மதிப்பேன்_ மாஜினி.

4. பயன்படுத்தாதப் புத்தகம் வெறும் காகிதக்கட்டுதான்_ சீன பழமொழி

5. புரட்சிப்பாதையில் கைத்துப்பாக்கிகளை விட
பெரிய ஆயுதம் புத்தகங்களே_ லெனின்

6. புத்தகம் காலத்தின் விதைநெல்_ பாரதிதாசன்

7. ஒரு புத்தகம் 100 நபர்களுக்குச் சமம் _ நியூட்டன்

8. வெறும் தாள்களுக்கு இரண்டு இடத்தில் மரியாதை உண்டு…
ஒன்று பணமாக மாறும்போது….
மற்றொன்று புத்தகமாக மாறும்போது…..

9. புத்தகங்கள் படிப்பது உறக்கம் வருவதற்கல்ல
உறங்க விடாமல் செய்வதற்கு…..
புத்தகம் என்பது உறக்கம் வராமல்
புரட்டுவதற்கு அல்ல…
நம்மை புரட்டிப் போடுவதற்கு_
எஸ். ராமகிருஷ்ணன்.

10. மனிதனின் கண்டுப்பிடிப்புகளில்
மிகச்சிறந்தது புத்தகமே_ ஐன்ஸ்டீன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here