உலக தாய்மொழி தினம் பிப்ரவரி 21

0
101

தாய் கருவிலே வளரும் உருவிலே!
தாய்சொல்லி வைத்தால்! தைரிய உரைத்தமிழிலே!!

உலகின்மூலம் நீ! உண்த வார்த்தைகளில்
உலகமொழிகளில் பரவிகிடப்பதில்
தாய்மை நீ!!

பெருஞ்சித்திரனார் பாவாணர் தொல் காப்பியர் கையில் தவழ்ந்த குழந்தை நீ!
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே! முன்தோன்றி மூத்தகுடி யாகி!

இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ்என
முப்பால் கொடுத்த!
சுரம்நிறுத்தா! என்றென்றும் இளம்தாய்பசுநீ!

உன் மலர் பாதம் தொழுவோம்!!
உன்,சொல் ,பொருள் யாப்பு, அணிகலன்களின் பெருமை!
உலகத்தில் வேறுமொழிக்கில்லையே!

உன் எழுத்தின் எண்ணிக்கையில்
உலகத்தின் முதன்மை சிகரம் நியே!
பாரதி, பாவேந்தர் நாவில் கவிதைமழையாகியவளும் நீயே!
ஔவையை மொழிபாடவைத்த
அணுவைபிளந்துஏழ்கடலை புகுத்திய குறளை தந்த திருவள்வரை வளர்தவளும் நீயே!

இருந்தும்! உன்னை கற்றது, கைமண்அளவு!!
கல்லாதது உலகளவு!
என்ற உயரிய
தமிழ்வரியை!
அமெரிக்கா கல்வெட்டில் இடம் பெறவைத்ததே!!

எங்களை இனிய மொழிபேசவைத்த
தமிழ் கடல் நீயே!
நீ என்றும்
இளமை! வளமை! வல்லமைகுன்றாது வாழிய! வாழியவே!

– கவிதை மாணிக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here