2021 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை

0
74

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். காலை 10.30 மணியளவில் அண்ணா நினைவிடம், கலைஞர் நினைவிடம் ஆகியவற்றில் தேர்தல் அறிக்கையை வைத்து வணங்கி மரியாதை செலுத்தினார்.

டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, சுப்புலட்சுமி ஜெகதீசன், டிகேஎஸ் இளங்கோவன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த குழு பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளை அறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

*இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்படும்.

*அதிமுக அமைச்சர்களின் ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்,

*ஆறுகளை மேம்படுத்த புதிய திட்டம்

*முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்

*ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்க 10,000 ரூபாய் மானியம்

*விவசாயிகளுக்கு மின் மோட்டார் வாங்க 10,000 ரூபாய் மானியம்

*தரை பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்ற நடவடிக்கை

*சட்டம் ஒழுங்கு பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்.

*பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களைக் களைய சைபர் காவல் நிலையங்கள் கொண்டுவரப்படும்.

*கல்வி நிலையங்களில் 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

*தமிழ் எழுத்து வரி வடிவம் சிதைவதை தடுக்க தனி சட்டம்

*முக்கிய மலைக் கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்

*மீனவர்களுக்கு 2 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

*தமிழ்நாட்டில் பள்ளி படிப்பை முடித்து, தமிழக கல்லூரிகளில் பட்ட படிப்புக்காக கல்விக் கடன் பெற்று ஓராண்டுக்குள் செலுத்தாத மாணவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

*வேளாண்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

கோவை தெற்கு: கமல்ஹாசன் வெற்றி வாய்ப்பு எப்படி?

*100 நாள்கள் வேலை திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும்.

* சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்படும்.

*கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன்களுக்குள் இருக்கும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

*பள்ளி மாணவர்களுக்கு காலை உணவாக பால் வழங்கப்படும்.

*200 தடுப்பணைகள் கட்ட 2000 கோடி ரூ ஒதுக்கீடு

தேர்தல் 2021: யாருக்கு வெற்றி? வெளியான கருத்துக் கணிப்பு முடிவு!

*தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்துவோம்.

*ஆன்மீக சுற்றுலா செல்ல 25ஆயிரம் வழங்கப்படும்.

*பேறுகால விடுப்பு 12 மாதமாக உயர்த்தப்படும்.

*இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்தப்படும்

*பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

*ஜெயலலிதா மறைவு குறித்த விசாரணை ஆணையம் மூலம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

*கடன் சுமையை சீர் செய்ய பொருளாதார மேல்மட்ட குழு அமைக்கப்படும்.

*போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.

*அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 70 வயதுக்கு மேல் 10 %, 80 வயதுக்கு மேல் 10 % உயர்த்தப்படும்.

*பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும்.

*கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படாது.

*முதல்வரின் தனி கட்டுப்பாட்டில் தனித் துறை உருவாக்கப்பட்டு, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

*அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறை கேட்கும் முகாம்கள் நடத்தப்படும்.

*மாதம் ஒருமுறை என மின் கட்டணம் மாற்றியமைக்கப்படும்.

*சென்னையில் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்.

*தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற கலைஞர் சிறப்பு வீட்டு வசதி திட்டம் கொண்டு வரப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

*அரசு வேலைவாய்ப்புகளில் பெண்கள் இட ஒதுக்கீடு 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக உயர்த்தப்படும்.

*32 லட்சம் கைம்பெண்கள், மாற்றுதிறனாளிகளுக்கு 1500 ரூபாய் ஓய்வூதியம்

*வேலையில்லா பட்டதாரிகள் குறு தொழில் தொடங்க 20 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

*75 சதவீத வேலை தமிழருக்கே வழங்கப்படும்.

*பத்திகையாளர், ஊடகத்துறையினர் நலனுக்கு தனி வாரியம் அமைக்கப்படும்.

*நீட் தேர்வு ரத்து செய்ய சட்டம் இயற்றப்படும்.

*அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் படி உடனடியாக பணி நியமனம் வழங்கப்படும்.

*ரேஷன் கடைகளில் மீண்டும் உளுந்து வழங்கப்படும்.

*500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும்

*ரேஷன் கடைகளில் கூடுதலாக 1 கிலோ சர்க்கரை வழங்கப்படும்

*மசூதி, தேவாலயங்களுக்கு 200 கோடி ஒதுக்கீடு

*இந்து கோயில்களை புனரமைக்க 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

*ஆவின் பால் விலை லிட்டர் 3 ரூபாய் குறைக்கப்படும்.

*பெட்ரோல் விலை ரூ 5, டீசல் விலை 4 ரூபாய் குறைக்கப்படும்.

*சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும்

*ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையாக 4000 ரூபாய் வழங்கப்படும்.

*பொங்கல் திருநாள் பண்பாட்டு திருநாளாக கொண்டாடப்படும்.

*திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

*500 வாக்குறுதிகளுக்கு மேல் உள்ளது

*தேர்தல் அறிக்கையை 12.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் வெளியிட துரைமுருகன் பெற்றுக் கொண்டார்.

* “திமுகவின் வேட்பாளர் பட்டியல் முதல் கதாநாயகன், தேர்தல் அறிக்கை இரண்டாவது கதாநாயகன்” – மு.க.ஸ்டாலின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here