முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்.

0
132

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்.

டெல்லியில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84) கடந்த 9ந்தேதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். எனவே அவர் மறுநாள் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே டாக்டர்கள் 5 மணி நேரம் ஆபரேஷன் செய்து அதை அகற்றினர். ஆனால் ஆபரேஷனுக்கு பிறகு பிரணாப்பின் உடல்நிலை மோசமடைந்தது.

எனவே வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்ற பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்று காரணமாக செப்டிக் ஷாக் ஏற்பட்டு உடல் நிலை கடும் பின்னடைவு அடைந்து இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்தது. ஆழ்ந்த கோமா நிலையிலேயே உள்ள பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையை மருத்துவ குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று காலமானார். இதனை அவரது மகன் அபிஜித் முகர்ஜி உறுதிப்படுத்தி உள்ளார்.

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். தனித்துவம் மிகுந்த மகன்களில் ஒருவரை தேசம் இழந்துவிட்டது என்று ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

*முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மாபெரும் தலைவரான பிரணாப் முகர்ஜி அரசியல் எல்லையை கடந்து அனைவராலும் மாதிக்கப்பட்டவர் என்று மோடி கூறியுள்ளார். நாட்டின் வளர்ச்சியில் அழியாத தடங்களை விட்டுச் சென்றுள்ளார் பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி என்று மோடி புகழாரம் சூட்டியுள்ளார். தனது 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் நாட்டின் பொருளாதாரம்,

*முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மாபெரும் தலைவரான பிரணாப் முகர்ஜி அரசியல் எல்லையை கடந்து அனைவராலும் மாதிக்கப்பட்டவர் என்று மோடி கூறியுள்ளார். நாட்டின் வளர்ச்சியில் அழியாத தடங்களை விட்டுச் சென்றுள்ளார் பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி என்று மோடி புகழாரம் சூட்டியுள்ளார். தனது 50 ஆண்டு

*முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு மிகுந்த வருத்தம் தருகிறது என ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்தார். மேலும் பிரணாப் முகர்ஜியின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ராகுல்காந்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

*முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு வருத்தம் அளிக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜியின் மறைவு தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

*பிரணாப் முகர்ஜியின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்: முதல்வர் பழனிசாமி இரங்கல்

*முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என்று முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர், நிதி, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சராக திறம்பட செயலாற்றியவர் பிரணாப் என பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

*இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் வென்றுகாட்டுவார் என எதிர்பார்த்த நேரத்தில் துயரச் செய்தி -பிரணாப் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

*கடின உழைப்பாலும், திறமையாலும் குடியரசுத் தலைவர் என்ற சிகரத்தை எட்டியவர் என்று ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். மாநில சுயாட்சி கருத்தரங்கில் பங்கேற்று, மாநில உரிமைகளுக்கு மதிப்பளித்து உரையாற்றியவர் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவராக்க கலைஞர் முன்னணியில் நின்று ஆதரித்தார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here