ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

0
210

இது பழமையானதும், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்தத் தலமாகும்

வேறு பெயர்கள் –  வன்புதுவை,ஸ்ரீதன்விபுரம்,திருவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இத்தலம்

இப்பகுதி மல்லி  என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது. வில்லி காட்டைத் திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமாக்கினான்.அதனால் வில்லிபுத்தூர் என்ற பெயர் உருவானது.ராணி மங்கம்மாள் தன் ஆட்சிக் காலத்தில் இவ்வூர் கோயில்களுக்கு பல திருப்பணிகளைச் செய்துள்ளாள்

முன்னொருகாலத்தில் இப்பகுதி வராக சேத்திரம் என அழைக்கப்பட்டது,ஷேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது.அதில் வில்லி,கண்டன் என இரு வேடுவ சகோதரர்கள் இருந்தனர்.அவர்கள் ஒருநாள் வேட்டையாடிவிட்டு வரும் போது கண்டன் புலி ஒன்றைத் துரத்திச் செல்கிறான்.அவனை புலி கொன்று விடுகிறது.இதை அறியாத வில்லி தன் சகோதரனைத் தேடி அலைகிறான்.சோர்வடைந்தவன் ஒரு மரத்தின் நிழலில் உறங்கி விடுகிறான்.அப்போது, அவன் கனவில் பெருமாள் தோன்று, கண்டனுக்கு ஆன நிலையைக் கூறுகிறார்.பின்னர் அவர் தாம் அங்கு “காலநேமி” என்ற பெயரில் இருக்கும் அசுரனை வதம் செய்ய எழுந்தருளியுள்ளதாகவும், பின்னர் ஆல்மரத்தடியிலுள்ள புதருக்குள் “வடபத்ரசாயி” என்ற திருநாமத்துடன் காட்சியளிக்கப் போவதாகவும் கூறி,இந்த காட்டை அழித்து நாடாக்கி தமக்குக் கோயில் எழுப்பி ஆராதனை செய்து வருமாறு கூறி மறைகிறார்.அதனால், இவ்வூருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற பெயர் வந்ததாக புராணம் கூறுகிறது

ஸ்ரீவரபத்ரசாயி பெருமாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 11 அடுக்குகளைக் கொண்ட கோவில் ஆகும்.இக்கோவில் கோபுரம் 192 அடி உயரமானது.இக்கோவில் கோபுரமே தமிழ்நாடு அரசின் அதிகாரப் பூர்வ சின்னம் ஆகும்.இக்கோவில் பெரியாழ்வார் என்னும் பெருமாளின் அடியாரால் கட்டப்பட்டது.ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையான இவர், தனது மருமகனான பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டியதாகவும் கூறுவர்.அவர், பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றி கொண்டு, அதனால் தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார்

இக்கோவிலில், மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகக் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுகிறது.நல்லெண்ணெய்,பசும்பால்,நெல்லிக்காய்,தாழம்பூ, இளநீர் ஆகிய பல பொருட்களைச் சேர்த்து ஏழுபடி எண்ணெய் விட்டு இரண்டு பேர் 40 நாட்கள் காய்ச்சுவர்.இதில் 4 படி தைலம் கிடைக்கும்.மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இத்தைலமே சாற்றப்படுகின்றது.மார்கழி மாதம் முடிந்ததும் பக்தர்களுக்குப் பிரசாதமாக இத்தைலம் கொடுக்கப் படுகிறது.பக்தர்கள் நோய்த் தீர்க்கும் மருந்தாக நம்பப்படுகிறது

18 ஆண்டுகள் ஓடாதிருந்த ஆண்டாள் நாச்சியார் பெரியதேர்  பல நூற்றாண்டு பழமை வாய்ந்தது. கலைநயமிக்க மர சிற்பங்களும்,ஒன்பது மரச் சக்கரங்களும் ஒன்பது மேலடுக்கு சாரம் அல்ங்கார பதாகைகளும், அதன் உச்சியில் ஐந்து பகுதி இணைக்கப்பட்ட கும்ப கலசமும் பட்டு கொடியும்  , ஒன்பது பெரிய வடமும் அமையப் பெற்றது.பத்து கிலோமீட்டர் தேரை மக்கள் பிடித்து இழுப்பர்

காலப்போக்கில் மரச் சக்கரங்கள் சேதமுற்றதால், தேர் 18 ஆண்டுகள் ஓடாமல் இருந்தது.

தற்போது மேலடுக்கு எண்ணிக்கையைக் குறைத்து இரும்பு அடிசட்டம், விசைத்தடையுடன் கூடிய நான் கு  இரும்பு சக்கரங்கள் அமைத்து தேர் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here