ஶ்ரீமகா கணபதி கோவில்

0
72

ஶ்ரீமகா கணபதி கோவில், இடகுஞ்சி, ஹொன்னவாரா தாலுக்கா, வட கர்நாடகா மாநிலம், ஷராவதி நதிக்கரையில் உள்ள அழகிய கிராமமான இடகுஞ்சி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 மில்லியன் பக்தர்களைக் கவர்ந்திழுக்கிறது. ஆம், அதுதான் இடகுஞ்சி விநாயகரின் சக்தி! இந்த நிலத்தை பாதுகாப்பதாக இறைவன் உறுதியளித்ததாகவும், என்றென்றும் இங்கு தங்க முடிவு செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு தோள்கள் உள்ள விநாயகரின் மூலவர் இங்கு வழிபாடு செய்யப்படுவது ஒரு முக்கிய அம்சம். 1500 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்ட இந்த ஆலயம் பக்தர்களின் கவனத்தை ஈர்க்கிறது. நிற்கும் தோரணையில் விநாயகர் நின்ற தோரணையில் சாலிக்கிராம சிலையாக கருவறையில் அருள்பாலிக்கிறார். . அவர் ஒரு கையில் தாமரையும், மற்றொரு கையில் அவருக்கு பிடித்த மோதகத்கதையும் (கொளுக்கட்டை) வைத்திருக்கிறார். மூலவரை பார்த்தால், பார்த்துக்கொண்டே இருக்கத்தோன்றும் அளவிற்க்கு, அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த சிலை பக்தர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. இடகுஞ்சி விநாயகரின் மகிமையை பலர் அனுபவித்திருக்கிறார்கள், எனவே இது மேற்கு கடற்கரையில் உள்ள முக்கியமான விநாயகர் கோயில்களில் ஒன்றாகும்.

இடகுஞ்சி கோவிலின் நேரம்

இடகுஞ்சி கணபதி கோவில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தரிசனத்திற்க்கு திறந்திருக்கும், மீண்டும் மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை மீண்டும் திறக்கப்படுகிறது. பக்தர்கள் காலை 7 மணி முதல் 11 மணி வரை மகா கணபதிக்கு செய்யப்படும் அபிஷேகத்தை காணலாம்.

தலவரலாறு

இந்த இடத்தைப்பற்றி, கணபதி புராணத்திலும், விஷ்ணு புராணத்திலும் குறிப்புகள் உள்ளன.பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் துவாபரா யுகத்தின் முடிவில் பூமியை விட்டு புறப்பட்டு வைகுண்டம் செல்ல முடிவெடுத்தார். இதனால் உலகம் பாதுகாக்கப்படாமல் போய்விடும் என்பதாலும், இது எல்லா முனிவர்களுக்கும், மக்களுக்கும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், பேரழிவு என்பதாலும், கலியுகத்தில் பூமியைப் பாதுகாக்க ஶ்ரீ கிருஷ்ணரை வேண்டி தவம் செய்ய பெரிய முனிவர்களும், மக்களும் முடிவு செய்தனர்.

ஷராவதி ஆற்றின் கரையில் உள்ள குஞ்சவன என்ற காட்டில் வலகில்யா என்ற தவசக்தி மிகுந்த முனிவர் தனது தியாகம் நிறைந்த யாகங்களை தொடங்கினார். துரதிர்ஷ்டவசமாக, அவரது சடங்குகள் அரக்கர்களால் தொந்தரவு செய்யப்பட்டது. எனவே, அவர்கள் அனைவரும் நாரத முனிவரை நாடி, இதற்க்கு ஒரு தீர்வை வேண்டினார்கள். விக்னங்களை நீக்கும் விக்ன விநாயகரை பிரதிஷ்டை செய்து வணங்குமாறு அவர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

முந்தைய ஒரு கல்பகாலத்தில், பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூவரும் இந்த புனித பூமிக்கு வந்து தங்களது படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலை பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் சக்ரதீர்த்த மற்றும் பிரம்மதிர்த்த ஏரிகளை இங்கு உருவாக்கியிருந்தனர். அப்படிப்பட்ட ஒரு சக்திவாய்ந்த இடத்தில் யாகம் செய்யுமாறும், யாகம் சிறப்பாக தடையின்றி நடைபெற விநாயகரை பிரதிஷ்டை செய்யுமாறும் நாரதர் கூறினார்.அதன்படி மக்களும், முனிவர்களும் விநாயகரை பிரதிஷ்டை செய்து, அவரை அந்த யாகத்தை தொடர்ந்து நடத்திட அருளுமாறு வேண்டினார்கள்.

கணபதியை தெய்வீக பிரசாதங்களுடன் வழிபட்டு, பிரார்த்தித்தனர். கணபதி தேவதீர்த்த என்ற குளத்தை உருவாக்கினார், யாகத்தில் பங்கேற்று யாகம் சிறப்பாக நடைபெற அருளினார். மக்களின் பக்தியால் ஈர்க்கப்பட்ட விநாயகர், குஞ்சவனத்தில் என்றென்றும் தங்க முடிவு செய்தார். இந்த குஞ்சவனம்தான் பின்னர் இடகுஞ்சி என்று அறியப்பட்டது, இது இந்துக்களுக்கு ஒரு புனித இடமாக கருதப்படுகிறது.இந்த யாகத்தால் மகிழ்ந்த ஶ்ரீகிருஷ்ணர், தான் அருகிலுள்ள உடுப்பி என்ற தலத்தில் சில காலங்களில் குடிகொண்டு பக்தர்களை காப்பேன் என்று அருளினார்.

இடகுஞ்சி விநாயகர் கோவிலில் இங்கு

இறைவனுக்கு வழங்கப்படும் சிறப்பு பிரசாதம் பஞ்சகத்யா என்பதாகும். சிறப்பு பூஜைகள் தவிர, யாத்ரீகர்கள் மதியம் மயூர் பிரசாதா போஜனலாயாவில் மதிய உணவு பரிமாரப்படுகிறது. கர்நாடகாவில் பெரும்பாலும் அனைத்து கோவில்களிலும் உணவு அனைவருக்கும் இலவசமாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.இடகுஞ்சி கோவிலில் திருமணம், உபநயனம் மற்றும் சௌலா (தலைமுடி இறக்கும் சடங்கு) போன்ற விசேஷங்கள் செய்யபபடுகின்றது. விசேஷ நிகழ்ச்சிகளுக்கு மண்டபம் கிடைக்கிறது. கோவில் வளாகத்தில் ஒரு சில தங்குமிடங்களும் உள்ளன. முன்பதிவு குறித்து தெரிந்துகொள்ய கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்.

கோவில் வளாகத்திலும் அதைச் சுற்றியும் இன்னும் பல உணவகங்கள் உள்ளன.

இடகுஞ்சியைச் சுற்றியுள்ள சில முக்கிய இடங்கள்.
முருடேஸ்வர் கோவில், (19 கி.மீ), அப்சரகொண்டா (12 கி.மீ), கோகர்ணா (68 கி.மீ), ஹொன்னவர் (15 கி.மீ) மற்றும் பட்கல் (30 கி.மீ) இடகுஞ்சியைச் சுற்றியுள்ள சிறந்த கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்கள்.இடகுஞ்சி பச்சை பசுமைகளால் சூழப்பட்ட ஒரு அழகிய சிறிய கிராமம். கர்நாடகாவின் உத்தர கர்நாடக மாவட்டத்தில் பார்க்க வேண்டிய அமைதியான மற்றும் புனித இடங்களில் இதுவும் ஒன்றாகும். இடகுஞ்சி விநாயகர் கோயிலுக்குச் சென்று பஞ்சகத்யத்தை படைத்து விநாயகரின் அருளுக்கு பாத்திரர் ஆகுங்கள்!இடகுஞ்சி ஹொன்னவரா தாலுகாவிலிருந்து 14 கி.மீ தூரத்தில் உள்ளது. இது முருடேஸ்வர் மற்றும் கோகர்ணா போன்ற கோயில்களுக்கு மிக அருகில் உள்ளது. ஹொன்னவாரா அருகிலுள்ள ரயில் நிலையம். எல்லா இடங்களிலிருந்தும் இடகுஞ்சிக்கு பஸ் சேவையைப் பெறலாம். செப்டம்பர் மாதத்தில் கணேஷ் சதுர்த்தி பண்டிகையின்போது இந்த கோயிலுக்கு பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், மகரிஷிகளும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

ௐ ஶ்ரீ மஹா கணபதயே நம…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here