வைகுண்ட ஏகாதசி…

0
75

வைகுண்ட ஏகாதசி… வைகுண்ட வாசல் வழியாக தரிசனம் செய்வோம்…!!
வைகுண்ட ஏகாதசி…!!
🌟 மார்கழி மாதம் என்றாலே விழாக்களின் மாதம் எனலாம். மாதங்களில் மிக புனிதமானதாக ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்கள் பார்க்கப்படுகின்றன. அதனால் இந்த மாதங்களில் திருமணம் உள்ளிட்ட பெரிய சுப நிகழ்வுகள் வைக்காமல் இறைவனை ஆராதிப்பதற்கான மாதமாக போற்றப்படுகிறது.

🌟 அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தில் வரக்கூடிய வைகுண்ட ஏகாதசி மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகின்றது. அதனால் தான் மாதங்களில் நான் மார்கழி என ஜகத்குருவாம் ஸ்ரீகிருஷ்ணபகவான் கூறினார். எம்பெருமான் மகா விஷ்ணு இருக்கக்கூடிய இடம் வைகுண்டம் என்பார்கள்.

🌟 மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினொன்றாம் நாள், ‘வைகுண்ட ஏகாதசி” மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படவுள்ளது. அந்த அற்புத திருநாள் பகல் பத்து, இராப்பத்து என இருபது நாள் திருவிழாவாகவும், பகல் பத்து முடியும் பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசி என கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

🌟 அதே போன்று ‘வைகுண்ட ஏகாதசி” தொடங்கி அடுத்து வரும் பத்து நாட்கள் இராப்பத்து என்ற நிகழ்வு நடக்கும். இந்த நாட்களில் இரவில் எம்பெருமான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருளுவார்.

🌟 இராப்பத்து முழுவதும் 10 நாட்கள் பெருமாள் கோவிலில் உள்ள வைகுண்ட வாசல் திறந்திருக்கும். வைகுண்ட வாசல் வழியாக சென்று நாராயணனை தரிசனம் செய்தால், நமக்கு முக்தியும், வைகுண்டத்தில் எம்பெருமானின் சேவையை செய்யும் பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வைகுண்ட ஏகாதசி விரதம் 

🌟 வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருந்து முன்னிரவு முதல் உறங்காமல், திருமாலின் பக்தி பாடலை பாடுவதும், புராண கதைகளைப் படிப்பதும், பஜனை பாடுதல், மகா விஷ்ணுவிற்கு உகந்த மந்திரங்களை உச்சரிப்பது, சொற்பொழிவு கேட்டல் ஆகிய பக்தி பரவசமூட்டும் செயல்களை செய்யலாம்.

🌟 இந்த அற்புத தினத்தில் விடியற்காலையில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று, கோவிலுக்கு வட கிழக்கு பகுதியில் உள்ள சொர்க்க வாசல் வழியாக கோவிலுக்குள் நுழைந்து இறைவனை வழிபட்டு வருவது வழக்கம்.

சிறப்பு 

🌟 வைகுண்ட ஏகாதசி அன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி என்பர்.

🌟 இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். பகைவர்கள் நீங்குவார்கள். மேலும், முக்திக்கான வழியை அடைவீர்கள். ஏகாதசி விரதமிருப்பவர்கள் சகல சௌபாக்கியங்களையும் அடைவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here