வேண்டுதல்கள்…

0
26

உயிர்கள் நிலைப்பெற
விதைகள் உயிர்பெற வேண்டும்
மழை வேண்டி
இறையை வேண்டுவதை விடுத்தே
மரங்களை பயிர் செய்யுங்கள்
நீங்கள் வேண்டாத வரத்தை
வேண்டியேத் தருவான் இறைவன்…

விழித்தெழும் விதைகளில்தான்
உயிர்த்தெழும் நம் வாழ்வு
மறந்துவிடாதீர்… இம்மண்ணில்
நாம் முளைத்ததன் பலனாய்
விதைத்துச் செல்வோம்
சிற்சில விதைகளை..
அவை விருட்சமாய் வளர்ந்தே
விடியல் காணட்டும்
நம் அடுத்தத் தலைமுறை…

-சசிகலா திருமால்
கும்பகோணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here