வெற்றி என்பது
ஒரு பறவையினுடைய வாழ்க்கையை போன்றது.
பிறந்த உடனே அதனால் பறக்க முடியாது
மெது மெதுவாக தனது இறக்கைகளை
பறப்பதற்கான முயற்சியில் ஈடுபடுத்தும்.
பிறகு கொஞ்சம் பறக்கும்
தவறி விழும்
திரும்பவும் பறக்கும்
ஒரு நாள் கண்ணுக்கே தெரியாத தூரம் பறக்கும்
இதை வெற்றி என்று நினைத்துக் கொண்டு
பறவை அங்கே நிற்க முடியாது.
பறவைக்கு பசிக்கும் தாகம் எடுக்கும்
அதற்கு பறவை திரும்ப கீழே வரும் வரவேண்டும்
ஆனால் மேலே போய் திரும்பி வந்த பறவை என்றாலும்
திரும்ப மேலே போவதற்கு பறக்கத்தான் வேண்டும்
வெற்றி என்பது நிரந்தரமற்றது
அதற்காக முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்…..