வெடிகுண்டுகளையும், கன்னிவெடிகளையும் கண்டுபிடித்து அழிக்கும் ஆட்டோமேட்டிக் ட்ரோன் ஒன்றை 16 வயது ஹர்ஷ்வர்தனிஷ் கண்டுபிடித்துள்ளார்.

0
56

எல்லையில் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது இதோ மீண்டும் சீனா தன் வேலையை காட்டத் தொடங்கி உள்ளது, கல்வான் பள்ளத்தாக்கை குறிவைத்து நடத்தும் சீனாவின் அத்துமீறல் செயல்கள் மீண்டும் தொடங்கியுள்ளதாக செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன, ஆரம்பம் முதலே அதை எப்படியும் முறியடிக்கும் விதத்தில் எதற்கும் தயாராக இந்தியா எல்லையில் ராணுவத்தை நிறுத்தியுள்ள நிலையில் மீண்டும் போர் சூழல் நிலவத் தொடங்கியுள்ளது, இரண்டு நாடுகளும் எல்லையில் ராணுவத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளபோது, இந்தியா போர் தொடங்கினாலும் 1962 க்கும் சேர்த்து பதில் கொடுக்க காத்துக் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், ஒருவேளை சீனாவையும்கூட அதிர்ச்சியடையச் செய்யும் ஒரு கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது,
அதிலும் 16 வயதே ஆன சிறுவனால் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப் பட்டுள்ளது என்பது மேலும் கவணத்தைப் பெறுகிறது, வெடிகுண்டுகளையும், கன்னிவெடிகளையும் கண்டுபிடித்து அழிக்கும் ஆட்டோமேட்டிக் ட்ரோன் ஒன்றை கண்டுபிடித்துள்ளான் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷ்வர்தனிஷ் என்னும் 16 வயதேயான சிறுவன். இதில் மேலும் சிறப்பு என்னவென்றால் இந்த அமைப்பு இதுவரை உலகத்தில் வேறு எந்த நாடும் கண்டுபிடிக்கவில்லை என்பதாகும், அதனால்தான் இந்த விசயம் செய்திகளில் நிறைந்திருப்பதும், பெரிய அளவில் உயர்த்தி காட்டப் படுவதும், வெடிகுண்டுகளையும் கன்னிவெடிகளையும் தேடிக் கண்டுபிடித்து அழிக்கும் இந்த ட்ரோனுக்கு ஈகிள்-ஏ7 என்று பெயரிடப் பட்டுள்ளது, இந்தியாவின் கையில் மட்டுமே இந்த தொழில்நுட்பம் உள்ளது என்பதும் அதுவும் 16 வயதுடைய சிறுவனால் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப் பட்டுள்ளது என்பதும் சிறப்பாக பார்க்கப் படுகிறது, குறிப்பாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மோதல்போக்கு நிலவக்கூடிய நிலையில் இந்தக் கண்டுபிடிப்பு மிகுந்த கவணத்தைப் பெறுகிறது, பெரும் மாற்றங்களுக்கு காரணமாக அமையப்போகும் இது இப்போது இந்திய ராணுவத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது, அதோடு உடனே ராணுவத்தில் இணைப்பதற்கான வேலைகள் மும்மரமாக நடந்து வருகின்றன. அதேபோல் ராணுவ உயர் அதிகாரிகள் பலரும் ஹர்ஷ்வர்தனிஷை வெகுவாகப் பாராட்டி உள்ளார்கள். மல்டி ஸ்பெசல் மைன் டிடெக்டர் ட்ரோன் இது என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த விசயத்தை முதன்முதலில் ஏ என் ஐ தான் வெளியிட்டது, அதன்பின்னர் ராணுவ அதிகாரிகள் விபரம் அறிந்து சிறுவனை வரவழைத்து ட்ரோன் பற்றிய விபரங்கள், தொழில்நுட்பம் பற்றி அனைத்து விசயங்களும் கேட்டு அனுமதித்ததோடு, சிறுவனின் கண்டுபிடிப்பில் ஆச்சர்யப் பட்டுள்ளார்கள்.
இந்தியா சீனா போர் மூண்டால் பயண்படுத்த முடியும் என்பதால் இந்த நேரத்தில் இது ஒரு உன்னதமான கண்டுபிடிப்பாக பார்க்கப் படுகிறது.
ஒருவேளை சீனர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி இருந்தால், இந்திய ராணுவத்தால் திருப்பி அனுப்பப்படும்போது திரும்பிச் செல்லும் வழியில் அவர்கள் கன்னிவெடிகளை வைத்துவிட்டுப் போகும் வாய்ப்புகள் உள்ளதால் அப்படி சூழ்நிலையில் அவற்றை கண்டுபிடித்து அழிக்கும் பணியில் இது பெரும் பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது, பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான ஆஃபர்கள் இப்போதே சிறுவனை நோக்கி வந்து கொண்டிருந்த போதிலும், அவற்றை எல்லாம் நிராகரித்து தனது கண்டுபிடிப்பு தனது தாய் நாட்டிற்கு மட்டுமே பயண்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. சொந்த நாட்டிற்கும் சொந்த நாட்டின் ராணுவத்திற்கும் வேண்டி தனது கண்டுபிடிப்பை சமர்ப்பிப்பதாகவும், வேறு எங்கிருந்து எவ்வளவு பணமோ ஆஃபர்களோ வந்தாலும் தரப்போவதில்லை என்றும் கூறியுள்ள 16 வயதே ஆன சிறுவன் ஹர்ஷ்வர்தனிஷின் பக்குவத்தை பார்த்து இந்தியா முழுவதிலும் இருந்து பெருமையோடு பாராட்டுக்கள் குவிகின்றனவாம்.
1962ல் போதுமான ஆயுதங்களோ கட்டமைப்புகளோ இல்லாத சூழ்நிலையில்கூட தமது வீரத்தை காட்டி உலகை அதிரச்செய்த நமது ராணுவ வீரர்கள் இன்று எத்தனையோ கண்டுபிடிப்புகளையும் ஆயுதங்களையும் கொண்டுள்ளதோடு உலகில் வேறு எவருக்கும் இல்லாத தேசப்பற்றும் வீரமும் தைரியமும் கொண்டு ஓட ஓட விரட்டுவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
அதற்கு இதுபோன்ற கண்டுபிடிப்புகள் பலம் சேர்க்கும். ஹர்ஷ்வர்தனிஷ் க்கு மகிழ்ச்சி வானொலியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here