வித்திற்கும் உரத்திற்கும் கடன்
வைத்து பாரத்திருந் தேன்!
வித்தை முளைகெட்டி காத்திருந்தேன்!!
வீரியமாய் முளைதெழுந்த விதையோ!!
வீணில் பயிராய் நின்றாயோ!!
வானில் நிறைமழை
பெய்யாமலே!!
வேணிற் கால குறைநிறை,
வீண்மழையாலே!!
படும்பாட்டை வரட்சிபுயலாலே!!
பார்த்தோம்பலர்விழியாலே!
பாழும் கிணறு வற்றிப் போக!
கோவையில்
பாவிஅரசுநெஞ்சம் குடிதண்ணீரையும்
சீமை ஏலத்திற்கு விற்றுப்போக!
பாடுபட்ட விவசாயத்தின்
பாதரவையாரிடம் சொல்லி அழ!!
பாடுபட்டவன்நிலை இப்படியே!!
தொடருமானால்!!
அடுத்து எங்கேதோணும் கரிசலை, உழ!!
வரும்என்ற வரவை நம்பி!!
செலவுசெய்தோம்!!
வட்டியும்முதலுமாய்
வைத்தநகையும்கூட்டி!
வக்கிரமாய்கேட்க
வருந்தி செத்தோம்!!
வரண்ட நிலமதில்
இருண்டமனமுடன்!!
வருங்கால பிள்ளைகள்
கல்யாண கனவுடன்!!
-கவிதை மாணிக்கம்