விவ”சாயம்”

0
139

அளந்த நெல்லை பங்கிட்டு கொள்ளலாம்
என்று வேலைக்கு சேர்ந்தேன் பண்ணையாரிடம்
வயல் என்னிடம் இருந்தது.
வசதி அவரிடம் இருந்தது

பருவ மழை பெய்யாமல் பொய்த்தது
நெல்லின் பங்கை விட்டு கொடுத்தேன்
கொஞ்சம் கடன் என்னிடம் இருந்தது
வசதி அவரிடம் இருந்தது.

மகசூலுக்காக மகளும் காத்திருந்தாள்
மங்களப் பெண்ணாய் மாலைமாற்ற
வயலை விட்டுக் கொடுத்தேன்
வருத்தம் என்னிடம் இருந்தது
வசதி அவரிடம் இருந்தது.

மகனின் மேற்படிப்பில்
என் ஏர்பிடிப்பும் நீளத் தொடங்கியது
விட்டுக் கொடுக்க வீடு நின்றது
வட்டிச் சீட்டு என்னிடம் இருந்தது
வசதி அவரிடம் இருந்தது

தற்கொலைப் படை தாக்குதலாய்
வட்டி வசூலிக்க வருகிறார்கள்
வறுமை என்னிடம் இருக்கிறது
வசதி அவரிடம் இருக்கிறது.

எல்லாவற்றையும் பறித்து
எனக்கு கிடைத்த ஏழை விவசாயி
பட்டத்தையும் அவரே சூட்டிக் கொண்டார்
இப்பொழுது என்ன பெயர் வைப்பது எனக்கு

ம.வினு மணிகண்டன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here