விஜய் மகனின் குரூப் போட்டோ இணையத்தில் வைரல்

0
52

விஜய் மகனின் குரூப் போட்டோ: இணையத்தில் வைரல்நடிகர் விஜய் தன்னுடன் படிக்கும் நண்பர்களுடன் எடுத்த குரூப் புகைப்படம் ஒன்று நேற்று இரவு முதல் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
தளபதி விஜய் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் திரைப்பட இயக்கம் மற்றும் டெக்னீஷியன் குறித்த படித்துக் கொண்டிருக்கிறார். கொரோனா வைரஸ் காரணமாக அவர் கனடாவில் மாட்டிக்கொண்டதாகவும், ஆனால் சமீபத்தில் இயக்கப்பட்ட சிறப்பு விமானத்தில் அவர் சென்னை திரும்பியதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்று இரவு முதல் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யும் அவருடன் படித்த நண்பர்களும் இணைந்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதால் சமூக வலைத்தள டிரெண்டிங்கில் இந்த புகைப்படம் குறித்த ஹேஷ்டேக் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கனடாவில் படிப்பை முடித்தவுடன் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க போகிறார் என்றும், ஒரு படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது. அனேகமாக அடுத்த ஆண்டு விஜய் மகனின் திரையுலக பிரவேசம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here