விஜய் தன்னிடம் வம்பிழுத்த கதையை மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.

0
47

மாளவிகா மோகனன் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய் தன்னிடம் வம்பிழுத்த கதையை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,மாஸ்டர் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். விஜய் உடன் நடிக்க யாருக்கு தான் பிடிக்காது. எனது முதல் நாள் படப்பிடிப்பே அவருடன் தான். எனக்கு நிறைய கஷ்டமான காட்சிகள் இருந்தன. முதல் நாள் என்பதால் எனக்கு பதற்றமாக இருந்தது. ஆனால் விஜய், என்னை பெரிதும் ஊக்குவித்தார். நான் நன்றாக நடிப்பதாக பாராட்டினார்.ஆரம்பத்தில் அவர் அமைதியாக தான் இருந்தார். ஆனால் எளிதாக அணுகக்கூடியவர். பழகுவதற்கு இனிமையானவர். ஷாட் முடிந்ததும் கேரவேனுக்கு செல்ல மாட்டார். கொஞ்ச நாள் பழக்கத்திலேயே அவரது இன்னொரு முகத்தை பார்த்துவிட்டேன். விஜய் இவ்வளவு ஜாலியான ஆளான என பார்த்து வியந்துவிட்டேன். நிறைய ஜோக்கடிப்பார். சில சமயம் வேடிக்கையாக என்னை வம்பிழுப்பார். யாரை பற்றியும் எதிர்மறையாக பேசவே மாட்டார். பாசிட்டிவிட்டி என்றால் அது விஜய் தான், என மாளவிகா மோகனன் விஜய்யை பாராட்டி தள்ளியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here